சனி, 1 அக்டோபர், 2011

எனக்கு ஞாபக மறதி! ப.சிதம்பரம்கணக்கிலும் பலவீனம்

புது தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
புது தில்லி, செப்.30: 2ஜி விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தனக்கு ஞாபக மறதி உள்ளதாகத் தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து தனது துறை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். தனது துறையின் செயல்பாடு, எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்கள் கூட்டத்தை சிதம்பரம் கூட்டினாலும் அவரது துறை சாராத கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் கேட்காமல் விடுவதில்லை.இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம். 2ஜி விவகாரத்தில் அவருக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதனால் இந்தச் சந்திப்பின் போது பெரும்பாலும் 2ஜி சார்ந்த கேள்விகளையே செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு சிதம்பரமும் சளைக்காமல் சுவையாகப் பதில் அளித்தார்.அவை வருமாறு:செய்தியாளர்கள்: 2ஜி விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு வழியாக சமரசத்தில் முடிந்துள்ளது. இதை உங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும், பிராணாபுக்கு கிடைத்த தோல்வியாகவும் எடுத்துக்கொள்ளலாமா?ப.சிதம்பரம்: நீங்கள் சொல்வதுபோல் எந்த ஒரு சம்பவமும் உள்துறை அமைச்சகத்தில் நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்கு ஞாபக மறதி உண்டு.செய்தியாளர்கள்: 2ஜி விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையால் நீங்கள் எத்தனை தடவை ராஜிநாமா செய்ய முன்வந்திருப்பீர்கள்?ப.சிதம்பரம்: எனக்கு ஞாபக மறதி உண்டு என்பது மட்டுமல்ல எனக்கு கணக்கிலும் பலவீனம் உண்டு. செய்தியாளர்கள்: நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரே ஒரு தடவை ராஜிநாமா செய்ய முன்வந்திருப்பீர்களா?ப.சிதம்பரம்: உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இப்போதுதான் நான் எண்ணக் கற்றுக்கொள்கிறேன்.செய்தியாளர்கள்: எங்களது கேள்விகளுக்கு நீங்கள் நேரடியாகப் பதில் அளிக்காமல் இவ்வாறு பதில் அளித்தால் அது மேலும் ஊகங்களுக்குத்தானே இடமளிக்கும்?ப.சிதம்பரம்: உண்மைதான். அவ்வாறு கிளம்பும் ஊகங்கள் உங்களது பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பப் பயன்படும் அல்லவா? அது தொடரட்டும். செய்தியாளர்கள்: அப்படியென்றால் நீங்கள் பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்ததை மறுக்கவில்லைதானே?ப.சிதம்பரம்: இது எனது அமைச்சகம் சார்ந்த கேள்வி அல்ல. அதனால் இதற்கு என்னிடம் பதில் கிடையாது.செய்தியாளர்கள்: தில்லி அரசியலில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி தொடர்பான நிதி அமைச்சகத்தின் குறிப்பின் சர்ச்சைக்குப் பிறகு நீங்கள் பலவீனம் அடைந்துள்ளதாக உணருகிறீர்களா?ப.சிதம்பரம்: இதுவும் எனது துறை சார்ந்த கேள்வி கிடையாது. இதனால் இதற்கு என்னிடம் பதில் இல்லை.செய்தியாளர்கள்: உங்களுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே தொடர் மோதல் ஏற்பட்டுள்ளதே?ப.சிதம்பரம்: இதுவும் எனது உள்துறை சார்ந்த கேள்வி அல்ல.செய்தியாளர்கள்: ஆனால் இது உள்துறை அமைச்சர் சார்ந்த கேள்வி அல்லவா?ப.சிதம்பரம்: உள்துறை அமைச்சர் சார்ந்த கேள்வி அனைத்துக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பதில்லை. இந்திய தேசத்தில் உள்துறை அமைச்சர் என்ற பதவி இப்போது இருக்கிறது. இது எப்போதும் இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக