சனி, 1 அக்டோபர், 2011

பாலா, அமீர் தயாரிப்பாளர்களை புலம்பவிடுவதில் வல்லவர்கள்

ஆதிபகவன் என்னாச்சு - தாடி எங்கே? ஜெயம் ரவி பதில்...  

   பாலா, அமீர் போன்ற இயக்குனர்கள் சிறந்த இயக்குனர்கள் என்பதை நிரூபித்திருந்தாலும் தயாரிப்பாளர்களை புலம்பவிடுவதில் வல்லவர்கள். விக்ரம், சூர்யா, ஜீவா, கார்த்தி என இப்போதைய வசூல் நாயகர்கள் எல்லோரும் இவர்களைக் கடந்து வந்தவர்கள் எனபதும் குறிப்பிடத்தக்கது.
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ஆதிபகவன். இதன் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பேராண்மை படத்தில் நல்ல பெயரை சம்பாதித்த ஜெயம் ரவி இன்னும் தன் திறமையை வெளிப்படுத்த அமீருடன் ஆதிபகவனில் களமிறங்கி இருக்கிறார்.
இந்த படத்தில் நடிக்க நீண்ட தாடி வளர்த்து வந்தார் ஜெயம் ரவி. இது ஒரு காதல் கதை என்றும் சொல்லப்படுகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடிக்கிறார்.
அமீர் படத்தில் நடித்தால் வேறு எந்த படங்களுக்கும் தேதிகள் கொடுக்க முடியாது என்பது தெரிந்து தான் நடிக்க சம்மதித்தார் ஜெயம் ரவி. ஆனால் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களாலும் படம் சில தடங்கல்களை சந்தித்தது.
இப்படத்தின் தயாரிப்பளர் திமுக எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நில மோசடி வழக்கு ஜெ.அன்பழகன் மீதும் பாய்ந்தது... அமீரிடம் பேசிய ஜெ.அன்பழகன் கொஞ்ச மாசம் பொருத்திருங்க என்று சொல்லிவிட்டாராம்.  இதனால் அப்செட்டில் இருந்தார் அமீர். 

இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு இப்போது மீண்டும் துவங்கி இருக்கிறது. திடீரென ஜெயம் ரவி தன் தாடியை எடுத்திருந்தார். பதரிப்போய் ஏதாவது பிரச்சனையா? படம் என்னாச்சு? என்று கேட்டிருக்கிறார்கள் கோலிவுட் நண்பர்கள்.
அட... பிரச்சனை எதும் இல்லைங்க... இது படத்தில் நான் நடிக்கிற இன்னொரு கெட்டப் என்பதை சொல்லி இருக்கிறார் ரவி. ஆம் படத்தில் ரவி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தாடி வைத்து ஒரு கேரக்டரும் மீசை மட்டும் வைத்து ஒரு கேரக்டரும் நடிக்கிறார் ரவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக