சனி, 15 அக்டோபர், 2011

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த துமிந்த சில்வாவின் மூளையில் பாதிப்பு!

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதேவேளை கண்களுக்கோ கண்பார்வைக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.மண்டையோட்டில் துப்பாக்கிச் சன்னம் இருக்கின்றமையால் குணப்படுத்துவதற்கு சில நாட்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முழுமையாகக் குணமடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று குறிப்பிடப்படவில்லை.
முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் உட்பட ஐவர் பலியானதுடன் துமிந்த சில்வா உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக