ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கொழும்பை நவீனப்படுத்தியது பாதுகாப்பு செயலாளரே

கொழும்பு மாநகரை பாதுகாப்புச் செயலாளர் நவீன மயப்படுத்தியது பாராட்டுக்குரிய ஒரு விடயம்


கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் கொழும்பு மாநகரை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சியினரின் பலத்த கண்டனம் எழுந்துள்ளது. என்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் எல்லோருக்கும் தெளிவாக விளங்கக்கூடிய நல்ல மாற்றம் இடம்பெற்றுள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது கொழும்பு மாநகரம் மிகவும் சுத்தமாக இருக்கிறது. முன்பு இருந்தது போன்று எந்தவித காரணத்திற்காகவும் குப்பைக் கூளங்கள் போடுவதை காண முடியாதிருக்கிறது.
கொழும்பு 7, செல்வந்தர்கள் வாழும் இடம் மட்டு மல்ல பொரளையில் உள்ள வனாத்தமுல்ல பிரதேசமும் மிகவும் சுத்தமாகவே காணப்படுகிறது. கொழும்பு மாநகரில் வாகன நெருக்கடியும் பெருமளவில் குறைந்திருக்கிறது. கொழும்பு மாவட்டத்திற்குள் கொள்கலன் வாகனங்களை இரவு நேரத்தில் மாத்திரம் செயற்பட விட்டால் இந்த வாகன நெரிசல் மேலும் குறைந்து விடும்.
கொழும்பு மாநகரம் படிப்படியாக நவ நாகரீகமான சகல வசதிகளையும் கொண்ட நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இன்று நடைபாதைகளில் வியாபாரம் செய்பவர்களை காணமுடியாதுள்ளது. அவர்களுக்கு தங்கள் வியாபாரத்தை செய்வதற்காக மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விதம் மாற்று இடங்களில் வியாபாரம் செய்யும் முன்னைய நடை பாதை வியாபாரிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய இடங்களில் வசதிகள் அதிகரித்திருப்பதுடன் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதாக கூறுகின்றனர்.
இப்போது நடைபாதைகளும் சீமேந்து கற்களை பதித்து அலங்காரமாக காணப்படுகிறது. நடைபாதை யில் கற்களை பதிக்கும் கொந்தராத்தும் ஒருவரிடமே கொடுக்கப்பட்டுள்ளதனால் அதில் சில தில்லு முல்லுகள் நடப்பதாக புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் உண்¨மையோ, பொய்யோ தெரியாது. ஆனால் நடைபாதைகள் நன்றாக இருக்கின்றன. கோட்டை, காலி முகத்திடல், பேர ஏரி, சுதந்திரசதுக்கம், தியவன்னா ஏரி ஆகிய பிரதேசங்கள் மாற்றமடைந்து அழகான தோற்றத்தை இன்று பெற்றுள்ளன.
புராதன மற்றும் அழகிய தோற்றத்தையுடைய கட்டடங்களை சிதைவில் இருந்து காப்பாற்றி அவற்றை திருத்தியமைத்து இன்று சிறந்த முறையில் காட்சியளிக்கக் கூடியதாக திருத்தப்பட்டுள்ளன. இவ்விதம் திருத்தி அமைக்கப்பட்ட அந்தப் பழைய கட்டடங்கள் கொழும்பு மாநகரத்தின் தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன. மொழும்பில் உள்ள ஒல்லாந்தர்களின் ஆஸ்பத்திரி, கொழும்பு மாநகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரம், சத்தாம் வீதியில் உள்ள பழைய கட்டடங்களும் இதற்கு சான்று பகர்கின்றன.
பேரை ஏரியை அடுத்துள்ள பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டு நவீனமயப்படுத்த ஜனாதிபதி பிரேமதாஸ காலத்திலும், மங்கள சமரவீர அமைச்சராக இருந்த போதும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டன. ஆயினும் அவை எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. இவை அனைத்தையும் பார்க்கும் போது கொழும்பு மாநகரம் முற்றிலும் மாறுபட்ட அழகிய கவர்ச்சிகரமான மாற்றத்தை காணக்கூடியதாக இருக்கிறது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விமர்சிப்பதற்கான சில காரணங்களும் இருக்கலாம். நான் அவை பற்றியும் சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். என்றாலும் பாதுகாப்பு செயலாளரின் முழுமையான நடவடிக்கையை நாம் எடைபோட்டு பார்க்கும் போது கொழும்பு மாநகரம் முன்பிருந்ததை விட இன்று அபிவிருத்தி அடைந்துவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் இவ்விதம் தெரிவிக்கும் கருத்து கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரர் என்பதால் அவரின் குடும்பத்தை மகிழ்ச்சியடைய எழுதப்பட்டது என்று கூறலாம். நான் அவ்விதம் சுயநல நோக்கத்துடன் இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. ஒரு நல்ல விடயத்தை யார் செய்தாலும் அதனைப் பாராட்டுவது அவசியமாகும். எனக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் எந்த தனிப்பட்ட தொடர்பும் இல்லை. நான் அவரை ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் தான் சந்தித்துள்ளேன். நான் அவருடைய நல்ல பணிகளை வரவேற்கின்ற போதிலும் அவை குறித்து விமர்சனங்களையும் செய்ய வேண்டியுள்ளது.
யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அவர் நாட்டுக்காக செய்த பணியை நான் உண்மையிலேயே மதித்து பாராட்டியுள்ளேன். கோத்தாபய ராஜபக்ஷவை பற்றி பேசும் போது எனக்கு ரஞ்சன் விஜேரட்ணவுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியுள்ளது. ரஞ்சன் விஜேரட்ணவும் சிலரால் அதிகமாக விமர்ச்சிக்கப்பட்டு கண்டனத்திற்கு உட்பட்டவராகவும் இருந்தார். அன்று ரஞ்சன் விஜேரட்ண நாட்டின் அவசர தேவைக்காக உயிரையே பணயம் வைத்து சேவையாற்றிய ஒரு மனிதராகவே பார்க்கிறேன்.
சமூகரீதியில் பார்க்கும் போது எனக்கு ரஞ்சன் விஜேரட்ணவை விடஇ ரோஹண விஜேவீரவிடம் அதிக தொடர்பு இருந்தது. நான் ரோஹண விஜேவீர மேற்கொண்ட இரண்டாவது புரட்சியை நீண்டகாலம் நீடிக்க விடமால் தோற்கடிக்க வேண்டும் எனும் புரட்சியைக் கொண்டிருந்தேன். இரண்டாவது புரட்சியை முறியடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் ரஞ்சன் விஜேரட்ண. ரஞ்சன் விஜேரட்ணவின் சிறந்த தலைமைத்துவம் இல்லாதிருந்தால் விஜே வீரவின் இரண்டாவது புரட்சியை முறியடிப்பது இலகுவாக இருந்திருக்காது.
இந்த இரண்டாவது புரட்சியை முறியடிக்கும் போது ரஞ்சன் விஜேரட்ணவினால் பல அராஜகங்கள் ஏற்பட்டது உண்மைதான். ஆயினும் இந்த இரண்டாவது புரட்சி வெற்றிபெற்றிருந்தால் அதை விட மோசமான அனர்த்தம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும். சமுதாய அடிப்படையில் எனக்கு விஜேவீரவுடன் நல்ல உறவு இருந்தாலும் அவருடைய புரட்சியை முறியடித்தது சமூகத்திற்கு ஒரு நல்ல செயற்பாடாகவே பார்க்கிறேன். அதனால் இந்த சாதனையை ஏற்படுத்திய ரஞ்சன் விஜேரட்ணவை ஒரு செயல்வீரனாக பார்த்து பாராட்டுகிறேன்.
ரஞ்சன் விஜேரட்ண கண்ணிவெடி ஒன்றின் மூலம் மரணித்தபோது ஏதோ ஒரு அலுகோசு மரணித்து விட்டான் என்று பலரும் மகிழ்ச்சியடைந்தார்கள். என்றாலும் ரஞ்சன் விஜேரட்ணவின் மரணத்திற்கு பின்னர் அவரது சாதனைகளை வெளிக்கொணர்வது எனது கடமையென நினைத்தேன். பத்திரிகையில் நான் அவ்விதம் எழுதியதற்கு எனக்கு பரவலான பாராட்டு கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் நான் அன்றைய சூழ்நிலையில் எழுதியது எனது பொறுப்பு என்று கருதுகிறேன்.
பிரபாகரனின் ஆயுத போராட்டத்தை முறியடித்ததும் ஒரு சிறந்த சாதனையென்றே பார்க்கிறேன். பிரபாகரனை ஒழித்தபோது பேரழிவுகள் ஏற்பட்டன. ஆயினும் பிரபாகரனை துவம்சம் செய்யாமல் இருந்திருந்தால் இதைவிட மிகப் பெரிய பேரழிவு நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும். பிரபாகரனை துவம்சம் செய்த சாதனைக்குரிய கெளரவத்தை நான் மூவருக்கு பகிர்ந்தளிக்க விரும்புகிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜ பக்ஷ, மற்றது ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய மூவரும் பாராட்டுக்குரியவர்கள்.
ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து நான் மகிழ்ச்சி யடைந்தாலும் அவரை சிறையில் வைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடையவில்லை. கோத்தாபய ராஜபக்ஷ யுத்த முனையில் சாதனை புரிந்தார் என்பது எனக்கு தெரிந்திருந்த போதிலும் அவர் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளில் சாதனை படைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்று அவர் நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்து வெற்றிகரமான முறையில் நிறைவேற்றியிருக்கிறார்.
அனைத்து விடயங்களையும் ஒரு இராணுவ வீரரைப் போன்று நோக்குவது அவருக்கு இருக்கும் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. ஒரு நகரத்தின் சிறப்பம்சம் அந்த நகரம் சுத்தமாக இருப்ப தாகும். ஆனால் நகரத்தைப் சுத்தமாக வைத்திருக்கும் பணியை மக்களுக்கு அச்சுறுத்தப்படாமலும் மக்களுக்கு இதனை நன்கு தெளிவுபடுத்தி சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுப்பதன் மூலமே முடியும். அச்சுறுத்தல் மூலம் ஒரு விடயத்தை சாதிக்க முடிந்தாலும் அது ஒரு நியாயபூர்வமான நடவடிக்கை அல்ல.
கொழும்பு மாநகரத்தை பாதுகாப்பு செயலாளர் அபிவிருத்தி செய்யும் போது அவருக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டு மக்களை சேரிவீடுகளில் இருந்து அகற்றும் செயற்பாடு என்று கூறப்படுகிறது. நான் எனது கண்ணோக்கில் பார்க்கும் போது பாதுகாப்பு செயலாளர் எடுக்கும் செயற்பாடு சரியானது. சேரிவீடுகளில் வாழ்பவர்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்கள் தொடர்ந்தும் ஏழ்மை நிலையில் துன்பம் அனுபவிக்க வேண்டுமென்று எவராவது நினைத்தால் அது வரவேற்கத்தக்க செயல் அல்ல. தற்போது எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி தோட்டங்களில் உள்ள சேரி வீடுகளில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 66 ஆயிரம். ஒரு குடும்பத்தில் 5 பேர் என்று கணக்கெடுத்தால் இப்படியான மக்களின் எண்ணிக்கை 3லட்சத்து 30 ஆயிரம். இவர்கள் அனைவரும் இன்று 142 ஏக்கர் நிலப்பரப்பிலேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இதன் அடிப்படையில் ஒரு பேர்ச் காணியில் 3 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் ஒரு தனிமனிதருக்கு இருக்கும் காணியின் அளவு 18.23 சதுர அடியாகும். ஒரு குடும்பம் கழிவறைகள் உட்பட பார்க்குமிடத்தில் 91.16சதுர அடி நிலப்பரப்பிலேயே வாழ்கிறார்கள். இது ஒரு மிகவும் மோசமான நிலை என்பதை நாம் மீண்டும் எடுத்துரைப்பது அவசியமல்ல.
இந்நிலையை நாம் மாற்றுவது அவசியம். நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக அல்ல இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியம். இதற்கு இருக்கும் ஒரே தீர்வு மாடி வீடுகளை நிர்மாணிப்பதாகும். என்றாலும் 66ஆயிரம் குடும்பங்களுக்கு மாடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பது இலகுவான காரியமல்ல. இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிக்கின்ற காணியை விற்பனை செய்வதன் மூலம் தேவையான பணத்தை திரட்ட முடியும்.
இவ்விதம் காணிகளை விற்று பணம் திரட்டுவதற்காக 142 ஏக்கர் காணி இனம் காணப்பட்டுள்ளது. ஒரு பேர்ச்சஸ் காணியை 20லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும். 142ஏக்கர் காணியை விற்பதன் மூலம் 45.440மில்லியன் ரூபாவை திரட்ட முடியும். இந்தப் பணத்தை ஒரு குடும்பத்திற்கென்று சராசரியாக பிரித்துப் பார்த்தால் 6.88லட்சம் ரூபா கிடைக்கும்.
இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு குடும்பம் வசதியாக வாழக்கூடிய மாடி வீடுகளை நிர்மாணிப்பது சாத்தியப்படாது. ஆயினும் இந்தக் காணிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் மாடி வீடுகளை கட்டுவதற்கான செலவீனத்தில் 70 சதவீதத்தையாவது ஈடு செய்யும். எஞ்சிய 30சதவீதத்தை அரசாங்கத்தினால் முதலீடு செய்ய முடியுமானால் இந்த மக்களுக்கு வசதியாக வீடுகளை அமைத்துக் கொடுக்க முடியும். இந்த வீடமைப்புத் திட்டத்தை விரும்பாதவர்கள் இருந்தால் ஏதாவது நட்ட ஈடுகள் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கலாம்.
இத்தகைய செயற்திட்டத்தின் மூலம் சேரிவீட்டு வாசிகளுக்கு நல்வாழ்வை பெற்றுக் கொடுக்க முடியும். இதன் மூலம் கொழும்பு நகர சேரிவீட்டு வாசிகளுக்கு சுமுகமான தீர்வை வழங்க முடியும். அத்துடன் அவர்களின் வாழ்க்கையையும் உயர்த்த முடியும். இத்திட்டத்தில் கொழும்பு சேரி வீடுகள் அற்ற கொழும்பு நகரமாக மாற்ற முடியும்.
கொழும்பு நகரில் உள்ள அநாவசியமான கட்டடங்களை அகற்றுவதும் ஒரு கடினமான செயல்தான். அது என்றாவது எவராவது ஒருவரினால் செய்ய வேண்டிய பணியாக இருந்தது. கடந்த காலத்தில் இந்த அநாவசியமான கட்டடங்களை தகர்த்தெறியாத காரணத்தினால் காளான்களைப் போன்று அதிகாரிக்க ஆரம்பித்தது. இதனால் நகரமே அவலட்சணமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் சட்ட விரோதமான கட்டடங்களை அமைக்கும் ஒரு கலாசாரத்திற்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்கலாம்.
முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி கம்யூனிச சமூக அமைப்பிற்காக பாடுபட்ட கால்மாக்ஸ் சித்தாந்திகளும் அவர்கள் கூட முதலாளித்துவக் கொள்கையின் நல்ல செயற்பாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். எங்கள் நாட்டு மார்க்ஸியவாதிகள் மத்தியில் நாட்டின் அபிவிருத்தி பற்றி இந்த நல்லெண்ணம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
www.mahaveli.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக