ஞாயிறு, 9 அக்டோபர், 2011

டாடா தென்ஆப்ரிக்காவில் மான்ஸா கார், டிரக்கை அறிமுகப்படுத்தியது

தென் ஆப்ரிக்காவில் மான்ஸா செடான் கார் மற்றும் பிரைமா டிரக்கை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
தென் ஆப்ரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் சர்வதேச மோட்டார் கண்காட்சி நடந்து வருகிறது. இதில்,டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

மான்ஸா செடான் கார், விஸ்டா ஹேட்ச்பேக் கார், வென்ச்சர் பயணிகள் வாகனம், ஏஸ் மினிடிரக், டபுள் கேப் ஸினான் பிக்கப் டிரக், பிரைமா டிரக் மற்றும் சிஎன்ஜி பஸ் என தனது அனைத்து தயாரிப்புகளையும் கண்காட்சியில் வைத்து அசத்தியது டாடா மோட்டார்ஸ்.

மேலும், தென் ஆப்ரிக்க பயணிகள் வாகன சந்தையிலும் முதன்முறையாக கால் பதித்துள்ளது.
தனது மிட்சைஸ் செடான் காரான மான்ஸாவை அறிமுகம் செய்து தென் ஆப்ரிக்க கார் சந்தையில் காலூன்றியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

மேலும், உலகத்தரம் வாய்ந்த தனது பிரைமா டிரக்கையும் நேற்று அங்கு அறிமுகம் செய்தது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பிஎம். தலாங் கூறுகையில்," தென் ஆப்ரிக்க சந்தையில் ஏற்கனவே வலுவான நிலையில் உள்ளோம். புதிய தயாரிப்புகள் மூலம் தென் ஆப்ரிக்க சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் மாறும்," என்று கூறினார்.

தென் ஆப்ரிக்காவில் டாடா மோட்டார்சுக்கு வாகன அசெம்பிளிங் தொழிற்சாலை உள்ளது. அந்த ஆலையில் தற்போது வர்த்தக வாகனங்கள் மட்டும் அசெம்பிளிங் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக