சனி, 15 அக்டோபர், 2011

காவல் நிலையம் எதிரே இன்ஸ்பெக்டர்&முன்னாள் போலீஸ் கட்டிப்புரண்டு சண்டை

வேலூர் காவல் நிலையம் எதிரே நடுரோட்டில் இன்ஸ்பெக்டரும், முன்னாள் போலீஸ்காரரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அடுத்த சித்தேரியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. போலீஸ்காரராக பணியாற்றிய இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இவர் அடிக்கடி வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு வந்து, போலீஸ் அதிகாரிகளை பற்றி தரக்குறைவாக திட்டிக்கொண்டு இருப்பார்.
நேற்றும் வழக்கம்போல் வேலூர் தெற்கு காவல் நிலைய வாசலில் நின்று கொண்டு,  தரக்குறைவாக பேசிக் கொண்டு இருந்தார். முதல்வர் பாதுகாப்பு பணிக்காக வேலூருக்கு வந்திருந்த திருவண்ணாமலை மாவட்ட இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியின் அருகில் சென்று அமைதியாக இருக்கும்படி கூறினார். அவரையும்   அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டருக்கும், பார்த்தசாரதிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் காவல் நிலையம் முன்பு கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதில் இருவருக்கும் லேசான ரத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த மற்ற போலீசார் விரைந்து சென்று சண்டையை விலக்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக