2 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு ராணா படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்திருந்தார் அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் நேற்று திடீரென இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அலுவலகத்துக்கு சென்றார் ரஜினி. இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள்.
ராணா படத்தின் படப்பிடிப்பு காலம் ஒரு வருடம் என்பதாலும், அதில் ரஜினிக்கு மூன்று வேடங்கள் என்பதாலும், தற்போதைய ரஜினியின் உடல் நிலை அதற்கு இடம் தராது என்பதால் ராணா-வை கைவிட அலோசித்ததாகவும் தெரிகிறது.
ஆனால், படையப்பா போன்ற ஒரு கமர்ஷியல் படத்தை எடுக்க முடிவெடுத்ததாகவும் தெரிகிறது. அதில் முன்னனி நடிகை ஒருவர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது என்று செய்திகள் கசிகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக