புதன், 26 அக்டோபர், 2011

கொழும்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் : முகாமைத்துவ பீடம் மூடப்பட்டது!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு மாணவர்களுக்குத் தற்காலிக வகுப்புத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் செனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சை நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மோதல்கள் இடம்பெற்றது. மோதல் சம்பவத்தில் சில மாணவர்கள் காயமடைந்திருந்தனர். எவ்வாறெனினும், முகாமைத்துவ பீடத்தின் பரீட்சைகள் திட்டமிட்டவாறு நாளைய தினம் நடைபெறும். முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதல் வருட மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய வருட முகாமைத்துவ மாணவர்களின் பீடம் இரு வாரங்கள் மூடப்பட்டுள்ளது.முகாமைத்துவ பீடத்தில் நீண்ட காலமாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் நிலவிவருகிறது. இன்றும் அவ்வாறே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுடன் தொடர்புடைய மாணவர் குழுக்களை பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக