ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக நந்திதா சேர்ப்பு!

கொல்கத்தா : பெண்கள் அவலத்தை சினிமா மூலம் எடுத்துக் காட்டும் நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பெண் தலைவர்கள் இணைந்து சர்வதேச பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தி தங்கள் அமைப்பில் சேர்க்கின்றனர்.அதன்படி, பெண்களின் அவலத்தை தனது நடிப்பால் சினிமா மூலம் வெளிப்படுத்திய நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார். சர்ச்சைக்குரிய படங்களான எர்த், பயர், பவாந்தர் போன்றவற்றில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து பெண்களின் வாழ்க்கை நிலையை வெளியுலகத்துக்கு இவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய மீயூசியம் கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் நடிகை நந்திதாஸ் கவுரவிக்கப்பட்டார். சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் நந்திதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையாக மட்டும் அல்லாமல், இந்திய குழந்தைகள் சினிமா அமைப்பின் தலைவர் பதவி உட்பட பல பொறுப்புகளில் நந்திதா தாஸ் இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக