திங்கள், 3 அக்டோபர், 2011

புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்

வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்!

வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள அதிக எண்ணிக்கையிலானவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
30 ஆண்டு கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், பல நாடுகள் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. புகலிடம் வழங்குவதில் கடுமையான விதிகள் பின்பற்ற படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில காலமாக இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பிலான விதிமுறைகளில் சில நாடுகள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் புகலிடம் வழங்க வேண்டிய அவசியமில்லை என பல நாடுகள் கருதுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த காலங்களில் புகலிடம் கோரிய பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் யுத்தத்தையே பிரதான ஏதுவாகக் காட்டியிருந்தனர்.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இவ்வாறு அடைக்கலம் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக