ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கனிமொழியை திகார் சிறையில் சந்தித்தார் கருணாநிதி


Karunanidhi and Kanimozhi
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மகள் கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார் திமுக தலைவர் கருணாநிதி.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். பின்னர் சனிக்கிழமை காலை அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து, இந்தியா திரும்பியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இன்று மாலை டெல்லி திகார் சிறையில் ஏறத்தாழ ஆறு மாத காலமாக உள்ள தனது மகள் கனிமொழியை சந்தித்து பேசினார்.
மகளைப் பார்த்ததும் கண்கலங்கினார் கருணாநிதி. கனிமொழியும் அழுதார். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.
2 ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்ட 17 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக