ஞாயிறு, 23 அக்டோபர், 2011

புலிகளுடன் பேசிவிட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்-விநாயகமூர்த்தி முரளிதரன்!

புலிகளுடன் பேசிவிட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என மீள்குடியேற்றப் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, மீண்டும் புலிகளுக்கு உயிரூட்ட முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்து வருகிறது. அங்கு சிங்களவர்கள் எவரும் குடியேற்றப்படவில்லை. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களை தவறான வழியில் நடத்திச் சென்று அவர்களை மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக