சனி, 15 அக்டோபர், 2011

புலிகளுக்கு உதவி நாடுகள் தகவல்களும் வெளியிடப்படும்

வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சொந்தமான பெரும் தொகையான பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்!

வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சொந்தமான பெரும் தொகையான பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.யுத்தம் முடிவடைந்த பின்னர், வெளிநாடுகளில் உள்ள புலிகள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலன் கருதி எவ்விதமான நிதிகளையும் வழங்கவில்லை எனவும் இந்த பணத்தை பயன்படுத்தி, அவர்கள் மீண்டும் போர் ஒன்றை ஆரம்பிக்க தயாராகி வருவது குறித்து அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.

புலிகள் அமைப்பின் ரகசியங்களை அறிந்த ஒரே நபர் தான் என தெரிவித்துள்ள முரளிதரன், வெளிநாடுகள் இலங்கைக்கு எதிராக பொய்யான போர் குற்றச்சாட்டுகளை சுமத்தினால், புலிகளுக்கு உதவி நாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

சீட்டு கட்டில் உள்ள 4 ஆசிகள் மாத்திரமல்ல துரும்பும் தன்னிடமே இருப்பதாகவும் இலங்கைக்கு எதிராக செயற்படும் நாடுகளின் துரும்புச் சீட்டும் தன்னிடம் இருப்பதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக