சனி, 15 அக்டோபர், 2011

ஜெயலலிதா ஆட்சியில் இதுவரை 154 கொலை, 165 கொள்ளை, 102 செயின்பறிப்பு, 27 வழிப்பறி: கலைஞர்


சென்னை மாநகராட்சி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திருவான்மியூரில் 14.10.2011 அன்று நடந்த தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உள்ளாட்சிகளில் நாம் வெற்றி பெறுவதை தடுப்பதற்காக ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற, தினந்தோறும் நம்மை வதைத்துக் கொண்டிருக்கிற, ஏழை எளியோர்களை வாட்டிக் கொண்டிருக்கிற கட்சியின் பெயரை நான் சொல்ல மாட்டேன் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும், முன்னணி வீரர்களை முடக்கிப் போட வேண்டும், சிறையில் தள்ளிவிட்டு தேர்தலை நடத்தி தேர்தலில் வேலை செய்யக் கூட தி.மு.க.வினர் அஞ்சிட வேண்டும் என்று அதற்கான பணிகளை, ஆதாரங்களை சேர்த்து வைத்துக் கொண்டு நம்மை விரட்டிக் கொண்டிருக்கிற ஆட்சி தான் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆட்சி.
இந்த ஆட்சியில் கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்று கூறினார். இந்த ஆட்சியில் இதுவரை 154 கொலை, 165 கொள்ளை, 102 செயின்பறிப்பு, 27 வழிப்பறி நடந்துள்ளது. அமைதியாக ஜெயலலிதா ஆட்சி இருக்கிறது என்பதற்கு அடையாளங்களா? சட்டம், ஒழுங்கு, அமைதி இப்படி இருக்கிறது. இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக