சனி, 29 அக்டோபர், 2011

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியினது கூட்டுச்சதியே காரணம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியினது கூட்டுச்சதியே காரணம்-உயர்கல்வி அமைச்சர் திசாநாயக்க!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியினது கூட்டுச்சதியே காரணம் என உயர்கல்வி அமைச்சர் திசாநாயக்க
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கூட்டமைப்புஇ ஜே.வி.பி, மற்றும் புலிகளின் நிழலாகச் செயற்படும் புலம்பெயர் தமிழர்கள் ஆகியோர் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.மாணவர்களை கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடவிடமால் தடுத்து அவர்களை வீதியில் இறக்குவதே ஜே.வி.பியின் இலக்கு எனத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர்,'வடக்கில் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்க கூட்டமைப்பும் ஜே.வி.பியும் முயற்சி செய்து வருவதாக யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டியது உண்மைதான்' என்றார்.
அத்துடன் மாணவர்கள் மற்றவர்களின் தூண்டுதல்களினால் தமது கல்விச் செயற்பாடுகளை நிறுத்தக்கூடாது என்றும், பிரச்சினைகளில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கூறியுள்ளார்.

ஏற்கனவே யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் பல்கலைக்கழகத்திலுள்ள பூமரங்களுக்கு நீருற்ற கூட வக்கற்றவரென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக