ஞாயிறு, 9 அக்டோபர், 2011

வடக்கில் பொதுமக்களை பயமுறுத்தும் திடீர் காணிப்பதிவு!

வடக்கில் காணிப்பதிவுகளை மீளவும் உறுதி செய்யுமாறு அரசாங்கம் கோரி யுள்ளமையினால் காணி உரிமையாளர்களிடையே திடீரென ஒரு பதற்றமும், பயமும் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. கடந்த இரண்டு வாரத்தி ற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பினால் மக்களிடையே ஒருவித மான பயப்பீதி நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இப்பயம் தேவையற்ற ஒரு விடயமே. உண்மையில் காணிகளின் உரிமையா ளர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதே அரசின் நோக்கமாக உள்ளது. வடக்கில் கடந்த முப்பது வருடகாலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக காணி கள் தொடர்பாக எவ்விதமான முறையான பதிவுகளும் இல்லாதுள்ளது. அத்துடன் அரச காணிகளில் பலர் அத்துமீறியும் குடியேறியுள்ளனர்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு இருந்த போது அரச இயந்திரம் இப் பகுதிகளில் முறையாக இயங்கவில்லை. அரச அதிகாரிகள் வெறுமனே பெயரள விலேயே இங்கு கடமையாற்றினர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமா கும். புலிகள் தமதிஷ்டப்படி அரச காணிகளைத் தமக்குச் சார்பான பலருக்கும் கூறுபோட்டுக் கொடுத்துள்ளது மட்டுமல்லாது அரச அதிகாரிகளை மிரட்டி அவ ற்றுக்கு உரித்துப் பத்திரங்களையும் வழங்கியிருந்தனர்.

அத்துடன் தற்போதைய காணிப் பதிவிற்கு இன்னுமொரு பிரதான காரணமாக இருப் பது தமக்குச் சொந்தமில்லாத பிறரது காணிகளில் சம்பந்தமே இல்லாது பலரும் குடியேறி அக்காணிகளில் வீடுகளையும் அமைத்துள்ளமையாகும். யுத்தம் காரண மாக மக்களில் ஒருசாரார் இடம்பெயர்ந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதும் அவர்களது காணிகளே அங்கேயே தங்கியிருந்தவர்களால் சூட்சும மான முறையில் சூறையாடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து சென்றவர்களின் காணி கள்தானே என்று புலிகளும் இவ்வாறு அடுத்தவர் காணிகளில் அத்துமீறிக் குடி யேறியவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்வாறு இருபது இருபத்தைந்து வருடங்கள் கழிந்துவிட்டன.

இன்று யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புலிகள் இல்லை என்ற நிலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி என்று எதுவும் இல்லை. நாட்டின் எல்லாப் பகுதிகளுமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள் இன்று எவரது அடக்குமுறைக ளுக்கும் ஆளாகாது சுதந்திரமாகத் தமது கடமைகளை வடக்கு, கிழக்கில் மேற் கொண்டு வருகின்றனர்.

அந்தவகையிலேயே வடக்கு, கிழக்கில் காணிப்பகுதிகளை மேற்கொண்டு சரியானதும், ஒழுங்கானதுமான ஒரு பதிவைப்பேண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைத் தவறு என்று எவராலும் கருத முடியாது. இது கட்டாயம் செய்யப்பட வேண்டியதொரு விடயம். இதனால் உண்மையான பலருக்கு நன்மையே கிடைக் கும். அடுத்தவர் காணிகளில் அத்துமீறியிருப்போருக்கே இப் பதிவினால் தர்ம சங்கடமான நிலை தோன்றும்.

இவ்விடயத்தை தமது அரசியலுக்காகச் சில தமிழ்க்கட்சிகள் பயன்படுத்த முயன்றுவரு வது வேடிக்கையான விடயமாக உள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இது தொடர்பாக மக்களைக் குழப்பும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளைவிட்டு ஊதிப்பெருப்பிக்கின்றனர்.

மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டால் இதனை வரவேற்பர். தமது காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஏன் தயக்கம் காட்ட வேண்டும். கள் ளமாக அடுத்தவர் காணிகளில் குடியிருப்போரே இவ்விடயத்தில் கலக்கமடைய வேண்டும். அவ்வாறெனில் வடக்கில் பலரும் தமது காணிகளை உறுதி செய்வதில் தயக்கம் காட்டுவது, புலிகள் தமது கட்டுப்பாட்டில் வடக்கு கிழக்கை வைத்திருந்த போது ஏதோவொரு வகையில் சூழ்ச்சி செய்து காணிகளை இவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதாகவே அர்த்தப்படும்.

அடுத்து யுத்தம் காரணமாகப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் சென்று குடியேறியுள் ளோர் தமக்கு வடக்கு, கிழக்கிலுள்ள காணிகள் தொடர்பாக இங்குள்ள தமது உற வினர்கள் மூலமாகவோ, அல்லது இணையத்தளம் மூலமாகவோ பதிவுகளை மேற் கொள்ள முடியுமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டும். அதற்காகத் தேவையான கால அவகாசமும் வழ ங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இனிமேலும் இவ்விடயம் தொடர்பாக அரசின் மீது வசைபாடுவது என் பது தேவையற்ற விடயம் உரிமையை உறுதிப்படுத்தும் எந்தவொரு தனியாரது காணியையும் அரசாங்கம் ஒருபோதும் பறிமுதல் செய்யமாட்டாது என உறுதி வழ ங்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் வெளிநாட்டில் இருந்தால் என்ன கொழும்பு அல்லது ஏனைய பகுதிகளில் வசித்தால் என்ன இந்த நடைமுறை அனைவ ருக்கும் பொருந்தும் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயத்திலும் மக்களை வைத்துத் தமது அரசியல் இருப்பிற்காக அறிக் கைகள் விடுவோரை நம்பிக் கலக்கமடையாது உண்மையை விளங்கி உங்களது நன்மைக்காக மேற்கொள்ளப்படும் இவ்விடயத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும். மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்குச் சரியான விளக்கம் அளிக்க வேண்டி யது அரசாங்க அதிகாரிகளது கடமையாகும். அவர்களும் அதனைச் சரியாகச் செய்து மக்களது ஐயங்களை நீக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக