வியாழன், 6 அக்டோபர், 2011

பேராசிரியர்.றோகான் குணரத்ன:பயங்கரவாதிகள் மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிவதால்

Rohan Gunaratna -5பயங்கரவாதம் தொடர்பான விடயங்களில் ஸ்ரீலங்கா உலகளாவிய அதிகார வரம்புக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - பேராசிரியர்.றோகான் குணரத்ன
- கே.ரி. ராஜசிங்கம்
பயங்கரவாதம் தொடர்பான விடயங்களில் அமெரிக்கா உலகளாவிய அதிகார வரம்புக்குள் விண்ணப்பிக்கிறது. ஸ்ரீலங்காவும் இந்த உதாரணத்தை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார், பேராசிரியர்.றோகான் குணரத்ன.
“ஸ்ரீலங்காவில் உள்ள பயங்கரவாத பிரச்சாரத்துக்கு புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புகளால் பாரிய அளவில் நிதியுதவி வழங்கப்பட்டது. அவ்வாறு நிதி வழங்கிய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களை வெளிக்கொண்டு வருவது அவசியம், மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர்களை இனங்கண்டு, இன்னமும் தமிழர்களின் மனங்களில் இடம் தேடி வரும் அத்தகைய எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
சர்வதேச பயங்கரவாதம் பற்றிய விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவரான பேராசிரியர். றோகான் குணரத்ன ஏசியன் ரிபியுனுடன் பேசும்போது, அத்தகைய செயற்பாட்டாளர்களில் வி.உருத்திரகுமாரன், பிதா எஸ்.ஜே.இம்மானுவல், நெடியவன்,மற்றும் வினாயகமூர்த்தி என்பவர்களும் அடங்குகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
எல்.ரீ.ரீ.ஈ யினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா இராஜதந்திரிகள், மற்றும் மேற்கிலுள்ள ஸ்ரீலங்கா செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகளைத் தொடர்வதாக பரவியுள்ள வதந்திகள் பற்றிப் பேசும்போது, அது ஒசாமா பின் லாடனின் மனைவி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் மற்றும் அமெரிக்க விசேட படையினருக்கும் எதிராகத் தாக்கல் செய்யும் வழக்குகளுக்கு பெருமளவு உதவி செய்கிறது எனக்கூறலாம் என்று பேராசிரியர். றோகான் குணரத்ன தெரிவித்தார்.
பேராசிரியர் சுட்டிக்காட்டியது,” பயங்கரவாதிகள் மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிவதால் ஒருவர் ஒருபோதும் பயங்கரவாதிகளுக்கு பயப்படக்கூடாது” என்று. எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களால் அவமானம் ஏற்படுத்துவதற்காக மிரட்டலுடன் ஏவிவிடப்படும் சட்டபூர்வ அடாவடித்தனமான வதந்திகளுக்கு ஒருவரும் பணிந்து விடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.” அச்சுறுத்தல், மிரட்டல், தமிழர் மனங்களில் நஞ்சு விதைத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் அடக்காவிட்டால் பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்” என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.
பிரபாகரன் வரலாற்றின் தவறான பக்கத்தில் எழுதப்பட்ட ஒருவர். மற்றும் தமிழர்கள் பிரபாகரனை இனிமேலும் ஒரு உதாரண முன்மாதிரியாகப் பின்பற்றக் கூடாது. பிரபாகரன், தமிழ் சமூகத்துக்கும் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள ஏனையோருக்கும் சொல்லொணாத் துன்பங்களையும் துயரங்களையும் கொண்டுவந்து சேர்த்தவர் என்பதை பேராசிரியர்.றோகான் குணரத்ன சுட்டிக் காட்டினார்.
அவர் மேலும் கூறியது, மேற்கத்தைய நாடுகள் ஸ்ரீலங்காவை விமர்சிப்பதை விடுத்து புனர்வாழ்வு நடவடிக்கைகள் வழங்கப்பட்டு விடுதலையாகியுள்ள எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களதும் மற்றும் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ள உள்ளக இடம் பெயர்ந்தவர்களினதும் வாழ்க்கையை மீளமைக்கவும் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைளில் பங்கு கொள்வதற்காகவும்  கொழும்புடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும், அதை விடுத்து எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குபவர்களால் வழி நடத்தப்படும் எல்.ரீ.ரீ.ஈ புலம் பெயர்ந்தவர்களால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்கக் கூடாது. மேலும் முக்கியமானது மேற்கத்தைய தலைவர்களான கனடியப் பிரதமர் திரு.ஹாப்பர் மற்றும் இன்னும் சிலரைப் போல தமிழர்களின் வாக்குகளுக்காக இழுபட்டுச் செல்லக் கூடாது. திரு.ஹாப்பரின் அறிக்கை எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதுடன், ஸ்ரீலங்கா மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்வதாகவும் இல்லை
எல்.ரீ.ரீ.ஈக்கு பயங்கரவாதத்தை மேலெழுப்புவதற்கு உதவும் முக்கியமான தனியொரு ஆதரவுத் தளமாக கனடா உள்ளது. எனவே கனடா தமிழர்களின் வாக்கு வங்கியின் வசீகரத்தில் மயங்கிக் கிடப்பதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான ஒரு பங்கினை வகிக்க வேண்டும், எனப் பேராசிரியர் கூறினார்.
  • ஏசியன் ரிபியுன்: தமிழர்களின் தொகையான வாக்கு முறை மேற்கில் ஏற்கனவே போய்விட்டது. இதை ஏன் இந்த மேற்கத்தைய நாடுகளின் தலைவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?
பேராசிரியர்.றோகான் குணரத்ன: ஸ்ரீலங்கா மற்றும் புலம்பெயர் சமூகத்திலுள்ள பெரும்பாலான தமிழர்களுக்கு சமாதானம் மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவிப்பதற்காக இப்போது ஒரு காந்தி மிகவும் அவசரமாகத் தேவைப்படுகிறார்.
  • ஏசியன் ரிபியுன்: ஸ்ரீலங்கா எவ்வாறு வதந்தி எழுப்பும் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு எதிராக வழக்குகளைத் தொடர முடியும்?
பேராசிரியர்.றோகான் குணரத்ன: கடந்த காலங்களில் எல்.ரீ.ரீ.ஈக்கு நிதியுதவி வழங்கியவர்களையும் மற்றும் கடின முயற்சியால் வெற்றி கொள்ளப்பட்ட சமாதானத்தை சீர்குலைப்பதில் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டு வருபவர்கள் மீதும் வழக்குகளைத் தொடர்வதற்கு ஸ்ரீலங்கா உலகளாவிய அதிகார எல்லையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு, ஐரோப்பாவிலுள்ள உலகத் தமிழர் பேரவை மற்றும் இதர எல்.ரீ.ரீ.ஈ முன்னணி அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட நிதி நிலை அறிக்கைகள் போன்றவற்றில் நிதி வழங்கியவர்களின் பின்னணி போன்ற தகவல்கள் கிடைக்கும்.
நான் நினைக்கிறேன் நாங்கள் மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பாக முக்கியமாக நீங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கம் எப்படி இந்த உலகளாவிய இயக்கம் அல்லது உலகளாவிய அதிகார எல்லை என்கிற பொறிமுறையை செய்வது என்பதனைப்பற்றி விரிவாக விளக்க வேண்டும்.
உதாரணத்துக்கு அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதம் தொடர்பான விடயங்களுக்காக உலகளாவிய அதிகார எல்லைக்கு விண்ணப்பித்துள்ளது. ஸ்ரீலங்காவும் இந்த உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும்.
  • ஏசியன் ரிபியுன்: நீங்கள் நினைப்பது உள்நாட்டின் பாதுகாப்பு மாதிரியை அடிப்படையாக கொண்டது போன்ற ஒன்றையா?
பேராசிரியர்.றோகான் குணரத்ன: அது உள்நாட்டின் பாதுகாப்பு மாதிரியுடன் எதுவித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இப்போது ஸ்ரீலங்காவில் அவர்கள் பாராளுமன்றத்தில் இந்த உலகளாவிய அதிகார எல்லையைப் பற்றி விவாதித்து வருகிறார்கள.; விரைவில் அதை நோக்கி முன்னேறுவார்கள்.
பேராசிரியர். றோகான் குணரத்ன போரின் பின்னர் சரணடைந்த எல்.ரீ.ரீ.ஈ  அங்கத்தவர்களிடம் தயவு செய்து மீண்டும் வன்முறைக்கு திரும்புவதை விரும்ப வேண்டாம் என விண்ணப்பித்தார்.
வன்முறையைப் பின்பற்றி இன்னமும் பிரிவினைக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பவர்கள் புலம் பெயர் சமூகத்தில் உள்ளவர்களே. அவர்கள் யதார்த்த பூமியில் வசிக்கவில்லை. நான் அவர்களிடம் வலியுறுத்துவது, ஸ்ரீலங்காவுக்கு பயணம் செய்து புனர்வாழ்வுப் பயனாளிகளுடன் பேசிப் பார்க்கும்படி, புனர்வாழ்வு வழங்கப்பட்ட 11.500 பேரில், 11,500 பேரும் விடுவிக்கப் பட்டுள்ளார்கள்.
  • ஏசியன் ரிபியுன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கினைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?
பேராசிரியர்.றோகான் குணரத்ன: தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பதிலாள் போலவே இருந்தது மற்றும் அவர்கள் தங்கள் தனி இன நிலையைக் கைவிட்டு செழிப்பான ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவதற்காக அனைத்து அரசியற் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். தமிழ் அரசியற் கட்சிகள் தீவிரமானவைகளாக இருந்தால் அவை தமிழர்களுக்காக மட்டும் பேசக்கூடாது,ஆனால் ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து சமூகங்களுக்காகவும் பேசவேண்டும்.ஸ்ரீலங்காவில் இனம் சார்ந்ததாகவோ அல்லது மதம் சார்ந்ததாகவோ தனியான ஒரு வளாகம் இருக்கக்கூடாது. அனைவரும் சகோதர சகோதரிகளைப் போல வாழ வேண்டும்.
நன்றி : (Asiantribune.com)
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக