வியாழன், 6 அக்டோபர், 2011

அமெரிக்க அதிபர் தேர்தல் 2012 ஜெயிப்பது சந்தேகம் பராக் ஒபாமா

வாஷிங்டன் : இரண்டாவது முறையாக அதிபராவது சந்தேகம்தான் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அண்மையில் நடத்திய ஆய்வு முடிவும் இதையே பிரதிபலிக்கிறது. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா கடந்த 2009 ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். முதல் கறுப்பின அதிபர் என்ற பெருமையும் கிடைத்தது. 4 ஆண்டுகளைக் கொண்ட இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது.
இதையடுத்து அடுத்த அதிபர் தேர்தல் 2012 நவம்பரில் நடைபெறுகிறது. இதில் மீண்டும் போட்டியிட ஒபாமா விரும்புகிறார். இதுதொடர்பாக முன்னணி நாளிதழ்கள் ஒரு ஆய்வு நடத்தின. அதில் ஒபாமா மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என 37 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அதிபராவார் என 55 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதுகுறித்து ஒபாமாவிடம் கேட்டபோது, ÔÔசர்வதேச நிதி நெருக்கடி காரணமாக வேலையின்மை 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். எனவே, 2வது முறை தாம் அதிபராவது சந்தேகம்தான்ÕÕ என ஒப்புக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக