செவ்வாய், 18 அக்டோபர், 2011

தண்ணீர், உணவு இல்லை: ஏர் இந்தியா விமானத்தில் 9 மணி நேரம் பயணிகள் தவிப்பு



வெப்பம் தாங்க முடியவில்லை. தண்ணீர், உணவு இல்லை: ஏர் இந்தியா விமானத்தில் 9 மணி நேரம் பயணிகள் தவிப்பு
ஆமதாபாதில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா 131 விமானம் திடீரென காட்விக் விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டது. பல மணி நேரம் ஆகியும் புறப்படாததால் பயணிகள் விமானத்துக்குள்ளேயே 9 மணி நேரம் அடைபட்டுக் கிடந்தனர்.
லண்டன் சென்ற அந்த விமானத்தில் 109 பயணிகள் இருந்தனர். ஏறத்தாழ 9 மணி நேரம் விமானத்திலேயே 109 பயணிகளும் இருக்க வைக்கப்பட்டனர். காவல் துறையினர் யாரையும் இறங்க அனுமதிக்கவில்லை.

பனி காரணமாக விமானம் தொடர்ந்து செல்ல முடியாமல் போனதாக விமான நிறுவனம் பின்னர் தெரிவித்தது. பின்னர் ஒருவழியாகப் புறப்பட்ட அந்த விமானம் ஹீத்ரு விமான நிலையத்திற்கு 9 மணி நேரத்துக்குப் பின்னர் போய்ச் சேர்ந்தது.
விமானத்திற்குள்ளேயே அடைபட்ட பயணி ஒருவர் கூறுகையில், என்ன காரணம் என்று யாரும் சொல்லவில்லை, ஏர் இந்திய நிறுவன அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விமானத்தில் வெப்பம் தாங்க முடியவில்லை. தண்ணீர், உணவு வகைகள் எதுவும் இல்லாததால் பெரும் சிரமப்பட்டோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக