திங்கள், 17 அக்டோபர், 2011

ஜே.வி.பியின் அதிகாரத்தில் தற்போது, 90 வீதத்தை கிளர்ச்சி அணி கைப்பற்றியுள்ளது?.

ஜே.வி.பியின் அதிகாரத்தில் தற்போது, 90 வீதத்தை தமது அணி கைப்பற்றியுள்ளதாக ஜே.வி.பியின் கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோமவன்ஸ அமரசிங்க, ரில்வின் சில்வா, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட மத்திய செயற்குழுவின் குறைந்தளவான எண்ணிக்கையினர் கையில் இருக்கும் ஜே.வி.பி அடுத்த சில தினங்களில் முற்றாக எதிரணியினரிடம் சென்று விடும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஜே.வி.பியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 5 கட்டங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தற்போது, அதில் நான்கு கட்டங்கள் பூர்த்தியாகி இருப்பதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சோமவன்ஸ, ரில்வின் சில்வா, அனுரகுமார திஸாநாயக்க, லால்காந்த உள்ளிட்டவர்கள் ஊடகங்கள் மூலம் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய போதிலும், தாம் மேற்கொண்ட நான்கு கட்ட நடவடிக்கைகள் மூலம் அந்த பொய்கள் தோற்டிக்கப்பட்டு கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் தமது அணியினர் நன்மதிப்பை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.

கட்சியின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதற்காக கிளர்ச்சிக் குழுவினர் 5வது கட்டமாக கொழும்பில் பாரிய மாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.

உண்மையான இடதுசாரி அரசியல் கொள்கைகளை வேண்டி நிற்கும் ஜே.வி.பியின் உறுப்பினர்களின் பெருபான்மையானவர்கள் இந்த மாநாட்டி கலந்துக்கொள்வார்கள் எனவும் குறித்த பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக