சனி, 15 அக்டோபர், 2011

அமெரிக்கா கோரியதைக் காட்டிலும் குறைவாக ராஜரட்னம் 11 வருட சிறைத் தண்டனையே பெற்றுள்ளார்.

 ரொய்ட்டர் செய்தியாளர் --  கிரான்ட் மக்கூல் 
    rajaratnam 151011
  • அரச வழக்கறிஞ்ர்கள் குறைந்தது 25 வருடங்களையாவது பெற்றுக் கொடுக்க தீவிரமாக முயன்றார்கள்
  • இடர் நிதிய மேலாளர் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்கிறார்
  • பேர்னாட் மடோஃப் இருக்கும் அதே சிறையையே இவரும் கேட்கிறார்
  • உடனடி சிறுநீரக செயலிழப்பை எதிர்நோக்குகிறார் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்
சுயமாக உருவாக்கிக் கொண்ட இடர் நிதிய ஜாம்பவான் ராஜ் ராஜரட்னம் இந்த தலைமுறையிலேயே மிகப்பெரிய வோல் ஸ்ரீட் பங்கு விற்பனை மோசடியில் ஈடுபட்டதுக்காக தண்டனை விதிக்கப் பெற்றார். உள்ளக பங்குப் பரிவர்த்தனையில் முன்னெப்போதும் விதிக்கப் பட்டிராத மிக அதிகபட்ச தண்டனையாக 11 வருட சிறைவாசம் அனுபவிக்கும்படி ஆணையிடப் பட்டுள்ளது. ஆனால் இது அரச வழக்கறிஞ்ர்கள் கோரியதிலும் எவ்வளவோ குறைவானது.
இரகசிய ஒட்டுக்கேட்பால் முதலீட்டு உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்த ராஜரட்னத்துக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் வியாழனன்று வழங்கப்பட்ட தண்டனை அவர்களை குறிவைத்த அரச வழக்கறிஞர்களுக்கு ஒரு மகுடத்தையே சூட்டியுள்ளது. ஸ்ரீலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த நிதிய மேலாளர் 7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான நியுயார்க் இடர் நிதியத்தைக் கொண்டு உச்ச ஸ்தானத்தில் வீற்றிருந்தார். ஆனால் பெரு நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக தகவல் சொல்பவர்களைக் கொண்ட வலையமைப்பு ஒன்றை நடத்தியதற்காக குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை அரச வழக்கறிஞர்கள் கோரிய குறைந்த பட்ச தண்டனையான பத்தொன்பதரை வருடங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இது தற்போது மூடப்பட்டுள்ள கலோன் குழுவில் பணியாற்றிய ராஜரட்னத்தின் பணியாளர் ஒருவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட 10 வருட தண்டனையை விட சிறிதளவே அதிகமாகவுள்ளது.
அதிகரித்த நீரிழிவு காரணமாக உடனடி சிறுநீரக செயலிழப்பை எதிர்நோக்கும் 54 வயதான ராஜரட்னம்,  நீதிபதி கடுமையான தண்டனை விதிக்கும்படி எழுப்பப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்ததாகச் சொன்னார். எதிரி தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கிக் காட்டிய ராஜரட்னத்தின் வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ள விரைவான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கான அறிக்கையை நீதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். அந்த அறிக்கை தெரிவிப்பது மாற்று சிறுநீரகம் ஒன்றைப் பெறும் முயற்சியை அவரது வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளார்கள் என்று.
தீவிர நோய்வாய்ப் பட்டுள்ள கைதிகளுக்கு சிறைச்சாலை இன்னும் மோசமான தண்டனையையே உருவாக்கும் என அமெரிக்க மாவட்ட நீதிபதி றிச்சட் ஹோல்வெல் குறிப்பிட்டார். எப்படியாயினும் அந்த சுகவீனம் அவர் சிறைச்சாலையை விட்டு சுதந்திரமாக வெளியேறுவதற்கான அனுமதிச் சீட்டாகாது என அவர் மேலும் கூறினார்.
பல மில்லியன்களுக்கு அதிபதியான ராஜரட்னம், ஸ்ரீலங்கா,பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புரிந்துள்ள தருமசிந்தையுள்ள பணிகளையும் நீதிபதி அவதானத்தில் எடுத்துள்ளார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கேட்டபின்னர் ராஜரட்னம் தனது வழக்கறிஞர்களுடன் உணர்ச்சி எதுவும் வெளிப்படுத்தாமல் நேராக வெறித்துப் பார்த்தபடியே நின்றார். அவரது தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னால் நீதிபதி ராஜரட்னத்திடம் அவர் ஏதாவது அறிக்கையை விடுக்க விரும்புகிறாரா எனக் கேட்டதற்கு “இல்லை. மிகவும் நன்றி கனம் கோர்ட்டார் அவர்களே என ராஜரட்னம் தெரிவித்தார். 80 நிமிடங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் பொழுது அவர்களது கட்சிக்காரர் மோசமான உடல்நிலைக்கான வெளிப்படையான அறிகுறிகள் எதையும் காட்டாத போதும் ராஜரட்னத்தின் வழக்கறிஞர்கள் நீண்டகால சிறைத்தண்டனை விதிப்பது அவருக்கு மரணதண்டனையை வழங்குவதற்கு ஒப்பாகும் எனத் தெரிவித்தார்கள்.
மடோஃப்பின் சிறைச்சாலையே பரிந்துரைக்கப் பட்டது
நன்கு அறியப்பட்ட போன்ஸி திட்டத்தை இயக்கிய பேர்னாட் மடோஃப் ஆயுள் தண்டனைக் கைதியாக  சிறைவைக்கப் பட்டுள்ள வட கலிபோர்னியாவின் புற்னரில் உள்ள சிறைச்சாலை ஒன்றையே தனக்கும் பரிந்துரைக்கும்படி விடுத்த ராஜரட்னத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி அதையே சிபார்சு செய்தார். அந்த சிறைச்சாலையில் அவரின் சகபாடிகளாக உயர் வர்க்க வெள்ளைச் சட்டை குற்றவாளிகளிலிருந்து சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொண்டவர்கள் வரையான வீச்சத்திலுள்ளவர்களும் கலகக்கார அங்கத்தவர்களும் உள்ளதோடு அது ஒரு வைத்தியசாலையையும் கொண்டுள்ளது.
ஒக்டோபர் 2009ல் வெளிவந்த பரவலான ஒரு குற்றவியல் வழக்கில் ராஜரட்னம் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்பட்டார். அந்த வழக்கு அமெரிக்காவிலுள்ள உயர்தர நிறுவனங்களான, கோல்ட்மான் சாக்ஸ் குழுமம், இன்ரெல் கூட்டுத்தாபனம், ஐபிஎம், மற்றும் எலைட் மக்கின்சி ஆலோசனை நிறுவனம் போன்றவற்றுடனும் தொடர்பு பட்டிருந்தது.
1980 ன் நடுப்பகுதியில் உள்ளிருப்போர் வர்த்தக விடயத்தில் பிரதான நபர்களாக கருதப்பட்டு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த கையகப் படுத்தலில் நிபுணரான இவான் போயஸ்கி மற்றும் கழிவுப் பத்திர நிதியுதவியாளர் மைக்கல் மில்க்கன் போன்ற வோல் ஸ்ரீட் அதிகார விளையாட்டு சக்திகளைப்போல  சந்தேகத்துக்குரிய பல தெய்வங்களைக் கொண்ட கோவிலைப்போலத்தான் ராஜரட்னத்தை அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
ராஜரட்னத்தின் செயற்பாடுகள் “வெட்கமற்றதும் எங்கும் பரவக்கூடியதும் மற்றும் அதிர்ச்சி உண்டாக்குபவையாகவும் இருந்தன” என்று அமெரிக்க உதவிச் சட்டத்தரணி றீட் புரொட்ஸ்கி வியாழனன்று அதிகபட்ச தண்டனையைக் கோரி நீதிமன்றத்தில் வாதித்தார்.
நீதிபதி ஹோல்வெல்லும் ராஜரட்னத்தின் குற்றங்களை எதிர்த்து குரலெழுப்பியபோது “உள்ளிருப்போர் வர்த்தக விடயத்தில் அரசாங்கம் மிகச் சரியாகவே செயற்படுகிறது எங்கள் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை சக்தியான சுதந்திர சந்தையை அது பலமாக தாக்குகிறது” எனத் தெரிவித்தார்.
ராஜரட்னத்தை நவம்பர் 28ல் சரணடையும்படி கட்டளையிடப்பட்டிருந்தது. அவர் தொலைபேசிப் பரிவர்த்தனைகள் ஒட்டுக்கேட்கப் பட்டதன் சட்டபூர்வ தன்மையைக் குறித்து ஒரு மேன்முறையிட்டுக்கு விண்ணப்பித்துக்கொண்டு தனது ஆடம்பர மான்ஹட்டன் குடியிருப்பில் தொடர்ந்தும் வீட்டுக்காவலில் தங்கியிருப்பதற்கு விடுத்த வேண்டுகொளை நீதிபதி நிராகரித்திருந்தார்.
கூட்டாட்சிக்கு உள்பட்டவர்கள் வழக்கப்படி விடுதலையாவதற்கு தயாராக முன்னர் தங்கள் தண்டனையில் குறைந்தது 85 விகிதத்தையாவது அனுபவித்திருக்க வேண்டும்.ராஜரட்னம் கைது செய்யப்பட்ட இரண்டு வருட காலத்தின்போது ஒருமுறை கூட நீதிமன்றத்துக்கு வருகை தராத அவரது மனைவி ஆஷா, நீதிபதி தீர்ப்பு வழங்கிய வேளையில் நீதிமன்ற அறையிலுள்ள பொதுமக்களின் இருக்கையின் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருக்க காணப்பட்டார்.
பங்கு வர்த்தக மோசடி மற்றும் சதி முயற்சி பற்றிய 14 குற்றச்சாட்டுகளுக்காக மே மாதம் ராஜரட்னம் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.அவரது இரண்டு மாத வழக்கு விசாரணையில் தனது சொந்தக் குற்றங்கள் சம்பந்தமாக அவர் வாக்குமூலம் எதனையும் வழங்கவில்லை,ஆனால் ஜூரிகளின் முன்னால் ஒலிபரப்பப் பட்ட பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் அவரது குரல் தொடர்ந்து கேட்டவண்ணமேயிருந்தது.
நீதிபதி அவருக்கு மேலும் 10 மில்லியன் டொலர்களை அபராதமாக விதித்ததோடு 53.8 மில்லியன் டொலர்களை விட்டுக் கொடுக்கும்படியும் கட்டளையிட்டார். அது அண்ணளவாக சட்டவிரோதமாகத் தேடிய இலாபத் தொகை மற்றும் வணிகத் திட்டத்துக் ஏற்பட்ட இழப்பினை ஈடுகட்டுவதற்குமான தொகை என நீதிபதி ஹோல்வெல் தெரிவித்தார்.
இந்த கலோன் வழக்கு, வர்த்தகர்கள் சகல வழிகளிலும் முயன்று ஒரு நிலையை அடைய முயற்சிக்கும் வோல் ஸ்ரீட் மற்றும் இடர் நிதிய தொழிற்சாலைகள் என்பனவற்றில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. அரச வழக்கறிஞர்கள் கூறியது ராஜரட்னமும் மற்றவர்களும் பெருநிறுவன வருவாய்களை அடையவேண்டி பெருநிறுவன உள் விசையியக்கத்தை அல்லது இன்னமும் அறிவிக்கப் படாத சேர்க்கையின் விபரங்களை பயன்படுத்தியதன் மூலம் எல்லை கடந்து செயற்பட்டுள்ளார்கள் என்று.
இந்த விசாரணைக்கு இரகசிய எப்.பி.ஐ(மத்திய புலனாய்வு பணியகம்)யின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதற்காக விரிவாகப் பயன்பட்டிருந்தன.இத்தகைய தந்திரங்கள் மாபியா மற்றும் போதை மருந்துக் கடத்தல் விசாரணைகள் போன்றவற்றுக்கே வழக்கமாகப் பயன்படுத்தப்படும்.
நீதித் திணைக்களத்தக்கு இந்த வழக்கு ஒரு மா பெரும் வெற்றியை ஈட்டித் தந்தள்ளது. வர்த்தகர்கள்,சட்டத்தரணிகள்,நிறைவேற்று உத்தியோகத்தர்கள்,மற்றும் ஆலோசகர்கள் உட்பட்ட 26 பேர்களில் 25 பேர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள் அல்லது சட்டவிரோதமான பங்கு பற்றிய குறிப்புகளை வழங்கினார்கள் அல்லது விற்பனை செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணையில் தண்டனை பெற்றார்கள்.
“திரு.ராஜரட்னம் கைது செய்யப்பட்ட போது இந்த வழக்கு ஒரு விழித்தெழ வைக்கும் அழைப்பாக மட்டும்தான் இருக்கமுடியும் என நாங்கள் சொன்னோம்” என ஒரு அறிக்கையில் மான்ஹட்டன் அமெரிக்க சட்டத்தரணி பிரீட் பஹாரா தெரிவித்துள்ளார்.
தொலைபேசி ஒட்டுக் கேட்டல் மூலம் பிடிபட்ட ஒரு சதி முயற்சியாளர்; உயர் பள்ளி ஒன்றின் முன்னாள் அழகுராணியான டானியல் செய்சி, அவர்  நியு காசல்  நிதியங்களின் இடர்நிதிய விற்பனையாளராக மாறியிருந்தார்.அக்காமை தொழில்நுட்ப நிறுவனங்களின் முழு ஆண்டுக் கண்ணோட்டம் பற்றி அவர்கள் விவாதித்தபோது ஜூலை 24,2008ல் பதிவு செய்யப்பட்டதின்படி செய்சி ராஜரத்னத்திடம் “ அவர்கள் வழிகாட்டியாக வரப் போகிறவர்கள்,இப்போதுதான் எனது ஆளிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கிடைத்தது.அவனை நன்கு சுருதியேற்றப்பட்ட பியானோவைப் போல நான் வாசித்தேன்” என்று கூறுகிறார்.
வழக்கு விசாரணையின்போது முன்னாள் மக்கின்சி ஆலோசகர் அனில் குமார்,மற்றும் முன்னாள் இன்ரெல் அதிகாரி ராஜீவ் கோயல் உள்ளிட்ட ராஜரட்னத்தின் முன்னாள் நண்பர்களும் மற்றும் கூட்டாளிகளுமான அநேகர் ராஜரட்னத்துக்கு எதிராக வாக்குமூலமளித்துள்ளனர்.
கோல்ட்மான் நிறுவன முதன்மை அதிகாரியான லொயிட் பிளான்க்பியன் கூட ஒரு கோல்ட்மான் குழு அங்கத்தவர் வங்கியின் இரகசிய கொள்கைகளுக்கு எதிராகச் செயலாற்றி குழுவினர் அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தைகளை ராஜரட்னத்திடம் வெளிப்படுத்தி உள்ளார் என வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உள்ளக வர்த்தக குற்றவாளிகள் அவர்களின் குற்றங்கள் மற்ற வகையான தவறான செயல்களைக் காட்டிலும் குறைவான தீங்கையே கொண்டிருக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் அநேகமாக கூட்டாட்சி வழிகாட்டிகளில் கூறப்பட்டுள்ளதைக் காட்டிலும் குறைவான தண்டனைகளையே பெறுகிறார்கள்.
சமீபத்தில் நீதிபதிகள் இவர்களுக்கு சில கடுமையான தண்டனைகளை விதித்திருந்தார்கள்.ஒரு முன்னாள் கலோன் உத்தியோகத்தரும் பங்கு விற்பனையாளரான 34 வயதான சிவி கோபர் என்பவருக்கு கடந்த மாதம் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.2008 ம் ஆண்டு வழக்கொன்றில் கிறடிட் சுயிஸ் முதலீட்டு வங்கியாளரான ஹாபிஸ் நசீமுக்கும் 10 வருட தண்டனையே விதிக்கப் பட்டது.
ராஜரட்னம் அவர்களைவிட சிறிதளவு கூடுதலாகப் பெற்றுள்ளார்ஃ
டீவே பெக்னோ அன்ட் கிராமர்ஸ்கி சட்ட நிறுவன பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியான தோமஸ் டீவே “அது ஒரு நீதியான தீர்ப்பு என்று நான் நினைக்கிறேன்” என்றார். “ குற்றத்தின் தீவிரத்தை சமநிலைப் படுத்தி மற்றும் அவரது மருத்துவ விடயங்களுக்கான சிக்கல்களை தடுத்து நிறுத்துவதற்குமான அவசியத்தையும் மற்றும் உரிய நேரத்தில் அவர் புரிந்துள்ள அவரது நல்ல பணிகளையும் நீதிபதி கருத்தில் கொண்டுள்ளார்”
ராஜரட்னம் கலோன் நிறுவனத்தை 1997ல் நிறுவி உலகின் மிகப் பெரிய இடர் நிதியத்தைக் கட்டியெழுப்பினார்.அவரது கைதுக்குப் பிறகு அது காயம்பட்டு சாயும் வேiயில் கலோன் அதன் முதலீட்டாளர்கள் அனைவரையும்  ஒன்றுமற்றவர்கள் ஆக்கியுள்ளது.
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக