சனி, 17 செப்டம்பர், 2011

UK MP -brain binley : இலங்கை மீது பிரயோகிக்கப்படக் கூடாது பிரிட்டன்

வெளிநாட்டு அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்படக் கூடாது பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்-MP-brain binley!

இலங்கை மீது வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என்று பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் செயலாளருமான பிரையன் பின்லே என்பவரே பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்திய உபகண்ட நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மனக்காயங்களை குணப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்போது இலங்கையினால் அதனை மேற்கொள்ள முடியாது போய்விடும்.

இலங்கையைப் பொறுத்தவரை பிணக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தபடி மனித உரிமைமீறல் விடயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் முன்னேற்றமொன்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான அரசியல் தீர்வொன்றிற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

எனவே ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு வாய்ப்பொன்று அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக