ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

jeyalalitha:திட்டத்தை மாற்றும் யாரும் இனி ஆட்சிக்கு வரமாட்டார்கள்

சென்னை: ""திட்டத்தை மாற்றம் செய்யும் யாரும், இனி ஆட்சிக்கு வரமாட்டார்கள்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): "ஒய்வூதியம் வழங்கும் திட்டத்தை அரசு சட்டமாக அறிவித்தால் நன்றாக இருக்கும். அடுத்து வேறு யாராவது ஆட்டக்கு வந்தால், மாற்றம் செய்து விடக்கூடாது'என்றார். குறுக்கிட்டு, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: அவையில், 110 விதிப்படியான அறிவிப்பில் விவாதம் கூடாது என்றாலும், உறுப்பினர் கேட்டதால் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. மாற்றங்கள் செய்யக்கூடிய யாரும், ஆட்சிக்கு வரமாட்டார்கள். அரசு அறிவித்துள்ள திட்டத்தை சட்டமாக்கலாம் என உறுப்பினர் கேட்கிறார். 500 ரூபாயாக இருந்த ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயாக நம்மால் உயர்த்தி வழங்க முடிகிறது, என்றார்.

ஊழல் வாதிகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டோம்: ""ஊழல் வாதிகளைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருக்க மாட்டோம்; சட்ட வல்லுனர்கள் கருத்துக் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முன்னாள் அமைச்சர் நேருவின் செயல்பாடுகளால், போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து, அமைச்சர் செந்தில்பாலாஜி பட்டியலிட்டார். இதுகுறித்து உறுப்பினர்கள் பேசியதாவது:

சவுந்தரராஜன்- மார்க்சிஸ்ட் : இதையெல்லாம் கேட்டால் நெஞ்சே அடைத்துவிடும் போல் உள்ளது. விரைவில், விசாரணைக் கமிஷன் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம்- கம்யூ : தி.மு.க., குடும்ப ஆட்சியில் என்னென்னமோ நடந்துள்ளது. நேரு இப்போது உள்ளே இருக்கிறார். எல்லாரும் நிரந்தரமாக உள்ளே இருக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணசேகரன்- கம்யூ : முறைகேடுகள் குறித்து விசாரிக்க, இன்றைக்கே விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


அப்போது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசும்போது, ""தி.மு.க.,வின் ஊழல் குறித்து, இன்றே விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். எதிலும் அவசரப்பட்டு இறங்கி, காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது,'' என்றார். மேலும்,""நன்கு யோசித்து, ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பவள் நான். இதுகுறித்து, சட்ட வல்லுனர்களின் கருத்துக் கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அளவுக்கு, ஊழல் செய்தோரைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருக்கமாட்டோம். எடுக்க வேண்டிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக