ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

கிடைத்துள்ள அமைதிச் சூழலை பாதுகாப்பது எமது கடமை

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே நடைமுறையில் சுயநிர்ணய உரிமைகளை பெற்றிருக்க முடியும். ஆனால், பல இழப்புக்களுக்கு மத்தியிலேயே இன்றைய அமைதிச் சூழல் பிறந்துள்ளது. இதைப் பாதுகாப்பது எங்கள் ஒவ்வொருடைய கடமையாகுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றைய தினம் (09) இடம்பெற்ற பொது மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தலைமைகளின் கடந்த கால தவறான வழிநடத்தல்கள் காரணமாக எமது மக்கள் உயிர் உடமைகளை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறான இழப்புக்களுக்கு மத்தியிலேயே இன்றைய அமைதிச் சூழல் பிறந்துள்ளது. இதைப் பாதுகாப்பது எங்கள் ஒவ்வொருடைய கடமையாகும்.
இந்நிலையில் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை எமது தமிழ் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே நடைமுறையில் சுயநிர்ணய உரிமைகளைப் பெற்றிருக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் அவர்கள் சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இன்றைய மக்கள் சந்திப்பில் மக்களது பல்வேறு தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
இதன்போது அமைச்சர் அவர்களுடன் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக