புதன், 21 செப்டம்பர், 2011

Imelda Sukumar: நகை அணிந்து செல்லும் சுதந்திரம் கூட அங்கு இல்லை

வெளிநாட்டு பயண அனுபவங்களை விபரிக்கிறார் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா


யாழ்.மாவட்ட அரச அதிபரின் அண்மைய வெளிநாட்டுப் பயணத்தின்போது தங்க நகைகள் அணிந்து வெளியில் செல்வதற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சுவிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டதாக அவரே கூறினார்.இது தொடர்பாக அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்ததாவது:
பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் இருந்து எனது தங்க நகைகளைக் கழற்றி கைப்பையினுள் வைக்குமாறு சொன்னார்கள்.
அத்துடன் அங்கு மலையடிவாரக் கிராமம் ஒன்றுக்குச் சென்றபோது காதிலிருந்த தோட்டைக்கூட கழற்றுமாறு சொல்லி விட்டார்கள்.
பின்பு சுவிஸ் நாட்டுக்குச் சென்றபோதும் அதே நிலைதான். அங்கும் நகைகளைக் கழற்றி வைக்குமாறு சொன்னார்கள்.
அங்குள்ள பெண்களும் நகைகள் எதனையுமே அணியாமல்தான் உலாவுகின்றனர்.
அந்த நாடுகளில் நகை அணிந்து சென்றால் அபகரித்துச் சென்று விடுவார்களாம்.
காதில் தோடு மாட்டியிருந்தால் காதோடு அறுத்துக்கொண்டு சென்று விடுவார்களாம்.
இந்தக் காரணத்தினால் என்னை நகைகளைக் கழற்றி வைக்குமாறு கூறினர்.
தங்க நகை அணிந்து செல்லும் சுதந்திரம் கூட அங்கு இல்லை என்றார் அரச அதிபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக