புதன், 7 செப்டம்பர், 2011

செக்ஸ் புகார்கள்: குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டது


நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள் புரத்தில் இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தில் முறைகேடுகளும், பாலியல் தொந்தரவுகளும் நடக்கின்றன என்று வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. இதை ஏற்கனவே நக்கீரன் சுட்டிக்காட்டியிருந்தது.

அக்காப்பகத்தை கிலேயில் டிரெஸ்ட் என்ற அமைப்பின் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜோனகன் ராபின்சன் என்பவர் நடத்தி வந்தார். இந்த காப்பகத்தில் ஏராளமான குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வந்தனர். 16 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த காப்பகத்தில் முறைகேடுகளும், பாலியல் தொந்தரவுகளும் வந்ததாக இங்கிலாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து அந்த கண்காணிப்பு குழு, பெங்களூரில் உள்ள ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற நிறுவனத்தின் மூலம் காப்பகத்தை கண்காணிக்க அறிவுறுத்தியது. ஆறுமாதங்களாக இந்த காப்பகத்தை கண்காணித்த அந்த நிறுவனம் அங்கு முறைகேடுகள் நடப்பதையும், சில மாணவர்களுக்கு அவர் பாலியர் தொந்தவு கொடுத்துள்ளார் என்றும், மேலும் சில மாணவர்களை போலியான ஆவணங்கள் மூலம் இங்கிலாந்துக்கும் அனுப்பி உள்ளார் என்றும் அறிக்கை கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் பாதிரியார் ஜோனகன் ராபின்சன் மீது வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதிர வைக்கும் தகவல்கள் கிடைத்தன. பாதிரியார் ஜோனகன் ராபின்சன் மாணவர்களை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்ததும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கியபோது, அவர்களுடன் மாணவர்களை ஓரின சேர்க்கை உறவுக்கு கட்டாயப்படுத்திய கொடுமையும் தெரிய வந்தது.
இதையடுத்து நேற்றைய தினம் மாவட்ட சமூக நல அதிகாரி உமாதேவி, வள்ளியூர் டிஎஸ்பி விஜயகுமார், சமூக பாதுகாப்பு துறை நன்னடத்தை அதிகாரி ராஜபதி ஆகியோர் அந்த காப்பகத்தை ஆய்வு செய்தனர். அதன் பின் அந்த காப்பகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டனர். அங்கு
தங்கியிருந்த 10 மாணவியர், 21 மாணவர்கள் துரிதமாக நெல்லையில் உள்ள சரணயாயத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இந்தச் சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியர் புகார் கூறப்பட்ட பாதிரியார் ஜோனகன் ராபின்சன் தற்போது இங்கிலாந்தி உள்ளார். இதனால் அவரை இன்டர்போலின் உதவி மூலம் கைது செய்து விசாரணைக்கு கொண்டு வர முடியும். அல்லது அடுத்தக்கட்டமாக இதற்காக இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் மூலம் அணுகி அவரை கைது செய்ய அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் எடுப்பார்கள் என்கிறது காவல்துறை வட்டாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக