புதன், 7 செப்டம்பர், 2011

கம்பெனி உயரதிகாரிகளில் 4 சதவீதத்தினர் சைக்கோ

லண்டன் : பொதுவாக நிறுவன உயரதிகாரிகளை சாதனையாளர்களாகவும், ரோல்மாடலாகவும் நாம் நினைப்பது உண்டு. ஆனால், சாதாரண மனிதர்களைவிட உயர் பதவியில் உள்ளவர்களில் 4 சதவீதத்தினர் மனநோயில் சிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது. பிரபல நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளின் மனநிலை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் பால் பபியக் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக யுனிவர்சிட்டி ஆப் பிரிட்டிஷ் கொலம்பியாவின் உளவியல் நிபுணர் பாப் ஹரே உடன் இணைந்து 111 கேள்விகளை தயார் செய்து அதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.

பிரபல நிறுவனங்களில் துணைத் தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களில் 4 சதவீதம் பேர் மனநோயில் சிக்கிய அறிகுறி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், சாதாரண பொதுமக்களில் 100ல் ஒருவர் தான் இந்த அறிகுறியுடன் உள்ளனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனினும், மிடுக்கான தோற்றம்,

நிலைமையை சமாளிக்கும் திறன், வசீகரமான பேச்சு உள்ளிட்டவற்றின் மூலம் தங்கள் சைக்கோதனத்தை மறைத்துவிடுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ÔÔசைக்கோ என்றால் இப்படித்தான் இருப்பார் என்று நீங்கள் நினைப்பது தவறு. உங்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். அவ்வளவு ஏன், உங்களுடன் நெருக்கமாக உள்ளவர்களோ அல்லது வாழ்க்கைத் துணையாக உள்ளவர்களோ கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதை உங்களால் உணர முடியாதுÕÕ என பாபியக் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக