புதன், 21 செப்டம்பர், 2011

புறக்கோட்டை வர்தகர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு!

நாட்டில் ஏற்பட்டுருந்த யுத்த சூள்நிலை காரனமாக பல ஆண்டுகளாக கொழும்பு நகரின் அபிவிருத்தி மந்தமாகவே நடைபெற்றது. இதனால் மிகவும் கூடுதலான தாக்கத்தை உனர்ந்தவர்கள் வியாபார சமூகத்தினர் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் அவர்களை கொழும்பு வர்தக சங்கத்தினர்கள் அமைச்சில் நேற்று(செப்.19)சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு நகர அபிருத்தியினால் வெளிநாட்டவர்களின் முதலீடுகள் அதிகரிக்கும் அத்துடன் உல்லாசப்பயனிகளின் வருகையும் அதிகரிக்கும் இதனால் உள்நாட்டு வர்தகர்களின் வியாபாரம் பெருகும், இதனால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகின்றன இதனையே நாட்டின் அபிவருத்தி என கூருவது என தெரிவித்தார்.

இவ்வாறு வியாபாரச் சமூகத்தினரின் பிர்ச்சினைகள் கேட்டு அறிந்து கொன்ட பாதுகாப்புச் செயலாளர் கொழும்பு நகர அபிவிருத்தி சம்பந்தமான எதிகால திட்டத்தையும் தெளிவு படுத்தினார்.

மேலும் தெரிவிக்கையில் சேரிகளில் வாழும் மக்களுக்கு கொழும்பில் 25 லெட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்க்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதையும் தெரிவித்தார்.

இங்கு வியாபாரச் சமூகத்தினர் பாதுகாப்புச் செயலாளரை பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தியதுடன் நடை பெற்று வரும் அபிவிருத்திக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கனேஸ்,திலங்க சுமதிப்பால அமைச்சின் உயர் அதிகாரிக்ள மற்றும் வர்தக சங்கத்தின் பலரும் கலந்து கொன்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக