புதன், 21 செப்டம்பர், 2011

தப்பியோடிய சிப்பாய்களில் 11 ஆயிரம் பேர் கைது!

இராணுவத்திலிருந்து தப்பி தப்பியோடிய சிப்பாய்களில் 11 ஆயிரம் பேர் கைது!
இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் அறுபதினாயிரம் பேர் தொடக்கம் 70 ஆயிரம் பேர் வரை நாட்டில் நடமாடுகின்றனர் என்றும் அவர்களில் 11 ஆயிரம் பேர் தான் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்தார்.

மன்னிப்புக்காலத்தை அவர்கள் பயன்படுத்தத் தவறியதால் அவர்கள் இராணுவம் மற்றும் இராணுவப்பொலிசாரினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.ஓராண்டு காலத்திற்குள் தப்பி ஓடிய படையினர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அதன் பின்னர் மீண்டும் படையில் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் மீண்டும் சேர விரும்பாதவர்கள் கடுமையான புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னரே விடுவிக்கப்படுவர் என்றும் இராணுவப்பேச்சாளர் மேலும் சொன்னார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக