ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்த இருவர் மதுரையில் கைது!

மதுரையில் போலி ஆவணங்களை தொழில் நுட்ப ரீதியாக நூதனமான முறையில் தயாரித்து வழங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடையாள அட்டைகள், மேலதிக கொடுப்பனவு ஆவணங்கள், அனைத்துத் துறைகளையும் சார்ந்த போலி சான்றிதழ்கள் ஆகியவற்றை இவர்கள் தயாரித்து வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செல்வராஜ், சார்லஸ் அலெக்ஸாண்டர் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து உயர் அதிகாரிகளின் கையெழுத்து முத்திரைகள், ரப்பர் முத்திரைகள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை, இவர்கள் அண்மைக்காலமாக இலங்கை அகதிகளுக்கும் போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக