ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

அமெரிக்கா உதவும்-வவுனியாவில் தூதுவர் பெட்ரீஷியா தெரிவிப்பு!

சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கு அமெரிக்கா உதவும்-வவுனியாவில் தூதுவர் பெட்ரீஷியா தெரிவிப்பு!

சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கு அமெரிக்கா உதவும்-வவுனியாவில் தூதுவர் பெட்ரீஷியா தெரிவிப்பு!

வடபகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்பு வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரீஷியா புட்டெனஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணி பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி 36 இலட்சம் ரூபா பெறு மதியான லொறியொன்றை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்து கொண்டிருந்தார். விவசாயிகள் மரக்கறிகளைக் கொண்டு செல்வதற்காக இந்த லொறியி னைப் பயன்படுத்தவுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு சென்றுள் ளமை தொடர்பில் புட்டெனஸ் மகிழ்ச்சி யையும் இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக