ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

ரேவா உதவியுடன் புதிய எலக்ட்ரிக் காரை களமிறக்க மஹிந்திரா திட்டம்

ரேவா உதவியுடன் புதிய எலக்ட்ரிக் காரை களமிறக்க மஹிந்திரா திட்டம்

ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் உலகின் பல முன்னணி கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

நாட்டின் மிகப்பெரும் வாகன தயாரிப்பாளர்களில் ஒருவரான மஹிந்திராவும் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவின் ஒரே எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான ரேவா நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதையடுத்து, புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படு்த்தும் பணிகளில் ரேவா மும்முரமாக இறங்கியுள்ளது.

இந்த நிலையில், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ரேவா நிறுவனத்தின் உதவியுடன் புதிய எலக்ட்ரிக் கார் மாடலை சொந்த பிராண்டில் வெளியிட மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிக் கார் ஏற்கனவே மஹிந்திரா தயாரித்து வரும் கார்களின் பிளாட்பார்மிலேயே வடிவமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அடு்த்த 3 முதல் 6 மாதங்களுக்குள் முறைப்படி மஹிந்திரா அறிவிக்க உள்ளது.

அடுத்த 18 மாதங்களில் புதிய எலக்ட்ரிக் கார் மஹிந்திரா பிராண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று மஹிந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மஹிந்திராவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார் அல்லது வெரிட்டோ செடான் கார்களை எலக்ட்ரிக் மாடலாக அறிமுகப்படுத்துவது குறித்து ரேவா எஞ்சினியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய எலக்ட்ரிக் கார் மஹிந்திரா பிராண்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக