செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு பாகிஸ்தானில் தடை!

லாகூர்: "மத வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதாக உள்ள ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களை பாகிஸ்தானில் யாரும் பயன்படுத்தக்கூடாது", என லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாகூர் நீதிமன்ற நீதிபதி ஷேக் அஜ்மத் சயீத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார்.
எனினும் கூகுள் மற்றும் இதர தேடுதளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டாம் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஃபேஸ்புக் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் முகமது நபிக்கு எதிராக மோசமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதால் அதை முற்றாக தடை செய்ய வேண்டும் என முகமது அசாத் சித்திக் என்ற பாகிஸ்தான் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களை அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சகம் முற்றாக தடை செய்துவிட்டது. இ்ந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது குறித்து அக்டோபர் 6-ம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக