புதன், 28 செப்டம்பர், 2011

எஸ்.பி.பி.சரணுடன் நடிகை சோனா சமரசம்!


நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு நடிகை சோனா சென்றபோது அவரிடம் பட அதிபர் எஸ்.பி.பி.சரண் பாலியல் முறையில் தவறாக நடக்க முயன்றதாக புகார் செய்தார்.
சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர் தான் காரணமாக இருப்பார் என்று சோனா கூறியிருந்தார்.
அத்துடன் எஸ்.பி.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசிலும் புகார் செய்தார்.
இந்த புகார் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் முன்ஜாமீனுக்கு மனு செய்தார், அதோடு என் மீது சோனா அபாண்டமாக புகார் கூறுகிறார். நான் அவரிடம் பாலியல் முறையில் தவறாக நடக்கவில்லை. அவர் தான் செக்ஸ் உணர்வை தூண்டும் வகையில் என்னிடம் நடந்து கொண்டார் என்று எஸ்.பி.சரண் கூறினார்.
இந்த நிலையில் சோனா எஸ்.பி.பி.சரண் விவகாரம் 27.09.2011 அன்று முடிவுக்கு வந்தது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன் என்று சோனா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக