புதன், 28 செப்டம்பர், 2011

சிம்புவை நயன் கழற்றி விட்டது ஏன்? கேரளாவை கலக்கும் புது செய்தி!!

முன்னாள் காதலன் நடிகர் சிம்புவை, நடிகை நயன்தாரா கழற்றி விட்டதற்கான காரணம் என்று ஒரு புதிய கதையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் கேரள மக்கள். அதோடு நயனுக்கும், கேரளாவின் முன்னணி நடிகர் ஒருவருக்கும் இடையே முன்பு காதல் இருந்ததாகவும் கிசுகிசுக்கிறார்கள். அதில் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை... தமிழ்நாட்டு மருமகளாகப் போகும் நயன்தாராவுக்கு, ஆரத்தி எடுக்க கோடம்பாக்கம் தயாராகி வருகிறது
பிரபுதேவா & நயன்தாரா திருமணம் விரைவில்  நடக்கவுள்ள நிலையில் நயனின் சொந்த ஊரான திருவில்லா பகுதியில் ஒருவருக்கொருவர் காதுகளில் சிலபல தகவல்களை கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது, சினிமாத் தொழிலுக்கு வந்த புதிதில் பிரபல மலையாள லால் நடிகருக்கும், நயனுக்கும் இடையே முன்பு காதல் இருந்தது என்பதுதான். நாளாக நாளாக லால் கொடுத்த டார்ச்சர் தாங்காமல், தொடர்பை விலக்கிக் கொண்ட நயன், உன்னைவிட பெரிய ஆள் ஒருத்தனை கைபிடிச்சு காட்டுறேன், என்று சவால் வேறு விட்டிருக்கிறார்.
தமிழக்கு வந்ததும், முன்னணி நடிகர் ஆகும் அத்தனை தகுதியும் சிம்புக்கு இருப்பதாக கருதி, அவரை காதலிக்கத் தொடங்கிய நயன், பின்னர் சிம்பு தனது சொல்பேச்சை கேட்க மாட்டார் என்பதால்தான் அவரை கழற்றிவிட்டு, சொன்னதை கேட்கும் பிரபுதேவாவை பிடித்துக் கொண்டார் என்று கிசுகிசுக்கிறார்கள் திருவில்லா பகுதி மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக