ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக-மஹிந்த சமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று ஜெனிவா பயணம்!
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று ஜெனிவா பயணமாகின்றனர்.
மேற்படி தூதுக்குழுவில் சிரேஷ்ட அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்த்தன உட்பட 21 பேர் உள்ள டங்குகின்றனர். ஜெனிவா மனித உரிமை மாநாட்டுக் கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்கு முன்னோடியாக கொழும்பில் அண்மையில் ராஜதந்திர மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ. எல். பீரிஸ் கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்தார். இந்த நாடுகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்த அமைச்சர் இலங்கையின் உண்மையான நிலையை அவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் அவர்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் 12ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் விவாதங்களை முன்வைக்க சில மேற்குலக நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந் நிலையில் அத்தகைய விவாதம் ஒன்றுக்கு உரிய பதில் வழங்கவும் குற்றச் சாட்டுக்களை முறியடிக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளதாக இலங்கையின் தூதுக்குழுவில் இடம்பெறும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;
இலங்கைக்கு எதிரான விவாதம் மேற்படி மாநாட்டில் முன் வைக்கப்படுமா இல்லையா என்பது பற்றி உறுதியாகக் கூற முடியாது. எனினும் எத்தகைய நிலையிலும் உரிய பதில் கொடுப்பதற்கு இலங்கை அணி தயாராகவே உள்ளதென தெரிவித்தார்.
அதேவேளை, கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் முக்கிய ராஜதந்திரிகளை அழைத்து கொழும்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அதன்போது வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மக்க ளுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து பூரண விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 30 ஆம் திகதி நிறைவுறவுள்ளது.
இம்மாநாட்டில் அமெரிக்கா, பிரி ட்டன் உட்பட ஐ. நா. சபை அங் கத்துவ நாடுகள் அனைத்தினதும் பிர திநிதிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக