வியாழன், 8 செப்டம்பர், 2011

அழுத்தங்களை முறியடிக்க சீனா உதவி

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை மீது கொடுக்கப்படும் அழுத்தங்களை முறியடிக்க சீனா உதவி வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை மீது கொடுக்கப்படும் அழுத்தங்களை முறியடிக்க சீனா உதவி வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக நம்பகமான அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை மீது அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையிலேயே இலங்கை இறையாண்மையை பாதுகாப்பதற்கு சீனா உதவி வழங்கும் என்று சீன உயர் தலைவர் வூ பங்குவோ உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவை நேற்று பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசிய போதே, சீ ன உயர் தலைவர் இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

தேசிய சுதந்திரம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், இலங்கை அபிவிருத்திப் பாதைக்கும், அதன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை மதிப்பதாகவும் சீன உயர் தலைவர் வூ பங்குவோ தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை கடும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில்,காப்பாற்ற உதவுவதாக சீனா உறுதிமொழி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக