செவ்வாய், 13 செப்டம்பர், 2011

நடிகையின் சொந்த வாழ்வில் தலையிடும் நடிகர்சங்க மாபியா

நடிகருடன் தொடர்பு: நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டு நடிக்கத் தடை
பெங்களூரு, செப்.12: கன்னட நடிகருடன் தொடர்பு கொண்டிருந்ததால், அவரது குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்ற காரணம் காட்டி நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை விதித்துள்ளனர்.கன்னட நடிகர் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமியை தாக்கியதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.நடிகை நிகிதாவுடனான தொடர்பால்தான் தர்ஷன் தன்னை அடித்துக் கொடுமைப் படுத்துகிறார் என்று விஜயலட்சுமி குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில், தர்ஷனின் குடும்பப் பிரச்சினைக்கு காரணமான நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் நடிப்பதற்கு தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. நடிகை நிகிதா கன்னடப் படம் எதிலும் நடிக்கக்கூடாது, அதேபோல அவரை தயாரிப்பாளர்கள் யாரும் தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

என்னடா திர்ப்பு இது ? ஆண் ஆதிக்க சமுதாயம் என்பதை மிண்டும் நிருபித்து விட்டான் கர்நாடக சினிமாக்காரன் .தர்சனுக்கு என்னடா தண்டனை ?அவனை வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலின் திர்ப்பு பிரமாதம் .
ஏண்டா நடிகனுக்கு எங்கேடா தண்டனை? ஒலகத்துக்கு ஒரு கண்ணுதானா? விபச்சாரத்துல பிடி பட்டாலும் வரிசைக்கு நிற்பாட்டி வச்சு பொம்புளைங்கலதான் படம் புடிச்சு காட்டறாங்க அதற்கு இணையான தவறு செஞ்ச ஆம்பளைங்கள விட்டுடரான்களே. இது புதுசா ஒரு சட்டமா வாழட்டும் ஒலகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக