செவ்வாய், 13 செப்டம்பர், 2011

கடாபியும் குடும்பமும்


முஅம்மர் கடாபி: 68 வயதான கடாபி நான்கு தசாப்தமாக லிபியாவை ஆட்சி செய்து வந்தவர். தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் இல்லை. தான் லிபியாவிலேயே இருப்பதாக அவர் அண்மையில் ஒலிநாடா மூலம் அல்ராய் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். கடாபிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.) பிடியாணை பிறப்பித்துள்ளது.
சைப் அல் இஸ்லாம்: 39 வயதான இஸ்லாம் கடாபியின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார். கிளர்ச்சியாளர்கள் இவரை சிறைப்பிடித்ததாக அறித்தது.
எனினும் அவர் திரிபோலி ஹோட்டலுக்கு வந்த அந்த தகவல் பொய்யென தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
சாதி கடாபி: 38 வயதான முன்னாள் கால்பந்து வீரரான சாதி கடாபி தற்போது நைகரில் தஞ்சமடைந்துள்ளார்.
முத்தஸ்ஸிம் கடாபி: 36 வயதான முத்தஸ்ஸிம் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கெளன்ஸிலின் ஆலோசகராக செயல்பட்டார். தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.
முஹம்மட் கடாபி: 41 வயதான முஹம்மட், கடாபியின் மூத்த மகனாவார். அத்துடன் அவரது முதல் மனைவியான அல்ஜீரியாவின் பாதிமா அல் நூரிக்கு பிறந்த ஒரே மகன் இவர் ஆவர். முஹம்மட் தற்போது அல்ஜீரியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஹனிபல் கடாபி: 33 வயதான ஹனிபல் லிபியாவின் தேசிய கப்பல் நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டார். தற்போது அல்ஜீரியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
அயிஷா கடாபி: 34 வயதான அயிஷா வழக்கறிஞராவார். தற்போது அல்ஜீரியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
சபியா: கடாபியின் இரண்டாவது மனைவியான சபியாவுக்கே அவரது 7 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது அல்ஜீரியாவில் தஞ்சமடைந்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக