செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சோனாவின் வழக்கை போலீசார் நியாயமாக அணுகுவர்களா?


SPB Charan and Sona
நடிகை சோனா கொடுத்த பாலியல் பலாத்கார புகார் விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் ஆகும் நிலை உருவாகியுள்ளது.
மங்காத்தா பார்ட்டியில் பங்கேற்றதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் பார்த்தவர்களில் ஒருவரான, பெயர் சொல்ல விரும்பாத, ஒரு நடிகர் நம்மிடம் இப்படிச் சொன்னார்:

"எஸ்பிபி சரண் மீது புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அவரை கைது செய்யவில்லை போலீசார். குறைந்தபட்சம், கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை. மாறாக அவர் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள போதிய அவகாசம் அளித்தனர்.திமுகவினர் படாதபாடு பட்டாலும் கிடைக்காத முன்ஜாமீன், எஸ்பிபி மகன் கேட்டவுடன் கிடைத்துவிட்டது. அதுவும் பாலியல் பலாத்கார வழக்கில். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக எஸ்பி பாலசுப்ரமணியன் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக சோனாவும் சில மகளிர் அமைப்புகளும் அறிவித்தன.

ஆனால் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி தராத போலீசார், எஸ்பிபி வீட்டுக்கு எக்கச்சக்க போலீஸ் பாதுகாப்பு போட்டனர். சோனாவை நேரடியாக அழைத்து, போராட்டம் நடத்தினால் உள்ளே தூக்கி போடுவோம் என மிரட்டியும் அனுப்பியுள்ளனர். இது என்ன வகை நியாயம்... இதுதான் போலீஸார் சட்டத்தைக் காப்பாற்றும் லட்சணமா...

புகார் கொடுத்தவர் எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? அவர் கொடுத்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என்றுதானே பார்க்க வேண்டும்?" என்று ஆதங்கப்பட்டார்.

இந்த நிலையில், சோனா வழக்கை அரசியல் காமெடியாக மாற்ற வெளிப்படையாகவே முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் அருள்துமிலன் என்ற வழக்கறிஞர், ஆண்கள் மீது பொய்யான புகார்கள் தரும் நடிகைகள் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தக்கூடாது என சோனாவை எச்சரித்த போலீஸ், இந்த நபரை மட்டும் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள்? எந்த தைரியத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதில் எஸ்பிபி சரணின் விளையாட்டு இருக்கலாம் என சோனா தரப்பில் சந்தேகிக்கிறார்கள்.
"பாதிக்கப்பட்ட சோனா பணம் பறிக்கவோ, வேறு வகையில் பேரம் பேசவோ முயற்சிக்கவில்லை. தன் விருப்பத்துக்கு மாறாக பலாத்காரம் செய்த சரணுக்கு தண்டனை தரவேண்டும் என விரும்பினார். குறைந்தபட்சம் அவர் தனது செயலுக்காக மன்னிப்பாவது கேட்க வேண்டும் என்றுதானே போராடி வருகிறார். ஆனால் எஸ்பிபி மகன் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, சோனாவை கேவலப்படுத்துவதில் குறியாக உள்ளார். அதன் எதிரொலிதான் இதுபோன்ற காமெடி அறிவிப்புகள்," என்றார் அந்த நடிகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக