சனி, 17 செப்டம்பர், 2011

அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்

அமெரிக்காவில் தனது மகள் மர்மமாக இறந்துவிட்டதாகவ, ஈரோட்டைச் சேர்ந்தவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை ராமலிங்கம் (65) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனிடம் அளித்துள்ள புகாரில், "கடந்த 2007ம் ஆண்டு எனது மகள் சங்கீதாவிற்கும் கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவசந்திரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

அமெரிக்காவில் ஐ.டி. இன்ஜினியராக இருந்த சிவசந்திரன் திருமணத்திற்கு பின் சங்கீதாவையும் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். இருவரும் அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணம் நேபர்வில்லி என்ற நகரில் வசித்து வந்தனர். சங்கீதாவும் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி சங்கீதா திடீரென இறந்துவிட்டதாக அமெரிக்காவில் இருந்து தகவல் வந்துள்ளது. சங்கீதா எப்படி இறந்தார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிய சிவசந்திரனை தொடர்பு கொண்டால் அவர் மொபைல்போனை எடுக்கவில்லை.
இதனால் சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. சங்கீதா இறந்த காரணத்தை கண்டறிந்து அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முதல்கட்ட விசாரணைக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக