வெள்ளி, 30 செப்டம்பர், 2011

புலம்பெயர் புலிப்பினாமிகளின் புலிமாயை

சிறைவாசம் தந்த ஞானோதயம் புலிகளுக்கு உயிரூட்ட நினைப்பவர்களின் செவிப்பறைகளுக்கு

கனேடிய சிறையில் கடந்த ஐந்து வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத முகவரான சதாஜன் சாராசந்திரன் தமிழ்இளைஞர் யுவதிகளுக்கு கடிதம் மூலம் பகிரங்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் ஆயுதங்களை ஏந்தி தமிழ் இளைஞர் யுவதிகள் தவறிழைக்கக் கூடாது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்த போது தான்  கைது செய்யப்பட்டதாகவும்

சிலர் தம்மை பிழையாக வழிநடத்தியதாகவும், தேவையற்ற வகையில் வன்முறை உணர்வுகளைத் தூண்டி விட்டதாகவும் இந்த நிலையை  எண்ணி தாம் வேதனைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகைமை உணர்வுகளையோ வன்முறையையோ யாரும் ஆதரிக்க வேண்டாம் என்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலான உதவிகளை வழங்க வேண்டுமெனவும் அவர் எழுதிய கடிதத்தில்
கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த விடுதலைப்புலி சிறைக்கைதியின் அவலக்குரலாய் எழுப்பப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட எத்;தனிக்கும் புலம்பெயர் புலிப்பினாமிகளின் புலிமாயை விரட்டியடிக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக