வெள்ளி, 30 செப்டம்பர், 2011

மாணவர்களுக்கு மலிவுவிலை கணினி அக்.5இல்

புதுடில்லி, செப்.29-தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மலிவு விலையில் (ரூ.1,715) கையடக்க கம்ப்யூட்டர் மற்றும் அதற்கான உபகரணங்களை வழங்க உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார்.

இது குறித்து கபில்சிபல் கூறுகையில், தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவருக்கும் எளிய வழியில் தொழில்நுட்ப வசதி கிடைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக சந்தையில் உள்ள மற்ற கம்ப் யூட்டர்களில் உள்ள வசதிகள் போன்று மலிவு விலையில் கையடக்க கம்ப்யூட்டர் தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த கம்ப்யூட்டரின் விலை ரூ.1,715. இவை அக்டோபர் 5ஆம் தேதி முதல் மாணவர் களுக்கு வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக