சென்னை, செப். 20: கேளிக்கை வரியை உயர்த்த வேண்டாம் என தமிழக மன்றாட்டம் அரசுக்கு யினர் திரைப்படத்துறை வே ண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் கேளிக்கை வரி மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில் 15 சதவீதமாகவும் இதர பகுதிகளில் 10 சதவீதமாகவும் நடைமுறையில் இருந்து வந்தது. இதை தமிழக அரசு தற்போது மாநகராட்சிகளுக்கு 30 சதவீதம் மற்ற பகுதிகளுக்கு 20 சதவீதம் என உயர்த்தியுள்ளது.
இது குறித்து தயாரிப்பளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், கில்டு அமைப்பு உள்ளிட்ட திரையுலகின் முக்கிய சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்தின. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: தமிழக அரசு தற்போது மாநகராட்சிகளுக்கு 30 சதவீதம் மற்ற பகுதிகளுக்கு 20 சதவீதம் என கேளிக்கை வரியை உயர்த்தியுள்ளது. இது திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கேளிக்கை வரியை முன்னர் இருந்தவாறு மாநகராட்சிகளுக்கு 15 சதவீதமாகவும் மற்ற பகுதிகளுக்கு 10 சதவீதமாகவும் நிர்ணயிக்க வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது போல புதிய திரைப்படங்கள் வெளியான முதல் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகளுக்கான நுழைவுக் கட்டணங்களை திரையரங்குகளே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருட்டு வி.சி.டி.யை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்பட சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கப் பொறுப்புத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், இயக்குநர் சங்கச் செயலாளர்கள் சேரன், அமீர், திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் அண்ணாமலை, பன்னீர்செல்வம், ஸ்ரீதர், கமலா திரையரங்கு உரிமையாளர்கள் வி.என். சிதம்பரம், சித. வள்ளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக