வியாழன், 29 செப்டம்பர், 2011

ஊடகங்களின் ஏக்கம், பிணங்கள் தெருவில் விழும் செய்தி வரவில்லையே

சங்கிலியன் சிலையை புத்தர் சிலையாக்கிய தமிழின விரோதிகள்.இப்போது யாழ் பழைய பூக்கா பற்றி திருகுதாளம்!…

யாழ் சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டபோது அங்கு புத்தர் சிலை கட்டப்படுவதாக தகிடு தித்து தாளம் போட்டன திரிபு வாத தமிழ் ஊடகங்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த யாழ் ஊடகங்கள் சிலவும் புலம்பெயர் சொகுசு ஊடகங்கள் சிலரும் சேர்ந்து பொரித்த மீன் துடிக்குது பார் என்று துடி துடிக்க பொய்யுரைத்து மக்களை நம்ப வைத்தனர்.ஆனாலும், யுத்த அனர்த்தனங்களின் போது சிதைவுற்றிருந்த சங்கிலியன் சிலை புதுப்பொலிலோடு புதிய கம்பீரத்தோடு அதே இடத்தில் எழுந்து நின்ற போது வெட்கித்தலை குனிந்தன வெட்கம் கெட்ட தமிழ் ஊடகங்கள்.

இன்னமும் குனிந்த தலை நிமிர முடியாமல் இருக்கும் அதே தமிழ் ஊடகங்கள் இப்போது யாழ் பழைய பூங்கா உடைத்து சிதைக்கப்படுவதாக பொய்ச்சாட்சியம் அளிக்க துணிந்து நிற்கின்றன. ஆயுதப்போராட்ட காலத்தில் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த யாழ் பழைய பூங்கா பட்ட சிதைவுகள் குறித்து எதையும் பேச தலைப்படாத சுயநலமிகள்,யழைய பூங்காவிற்குள் சேறும் சுரியுமாக நாற்றம் வீசும் பாழடைந்த ஏரியை கண்டுபச்சாத்தாப உணர்வு கூட கொள்ளாத  விசமிகள் இப்போது அந்த பூங்காவை திருத்தி மக்கள் பாவனைக்கு விடவிருக்கும் முயற்சியின் மீது கறை பூசி தமது வழமையானதகிடு தித்தி தாளம் போடும் திருவிளையாடலை ஆரம்பித்துள்ளன.
ஏன்ன செய்வது?… சில ஊடக வியாபாரிகளுக்கு மிகப்பெரிய மனத்துயரம்.. செத்த பிணங்கள் தெருவில் விழுவது செய்தியாக வரவில்லை என்ற ஏக்கம். யுத்தம் ஒழிந்து விட்டது என்ற ஏமாற்றம். அதுதான் செய்திப்பஞ்சத்தில் அலைகின்றார்களாக்கும் இல்லை
இருந்து பாருங்கள்! யாழ் கச்சேரி பழைய பூங்கா புதிப்பிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு விடப்படவிருக்கிறது. அப்போது நீங்கள் இப்போது வெளியிட்ட செய்திக்காக இன்னொரு தடவை தலை குனியப்போகிறீர்கள்.
தமிழர்களே!…. உங்கள் போராட்ட உணர்வை முதலில் உங்களை முள்ளி வாய்கால் வரை இழுத்து சென்று அதள பாதாளத்தில் தள்ளிவிட்ட ஊடகங்களுக்கு எதிராக திசை திருப்புங்கள்….வெட்கம் கெட்டு தலை குனியப்போகும் ஊடகங்கள் சில இங்கே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக