வியாழன், 29 செப்டம்பர், 2011

சார்ஜாவில் இலங்கையர் 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை

சார்ஜாவில் உள்ள 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 இலங்கையர்கள் உள்ளடங்கலான கொள்ளையர் குழுவினரை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பலகடைகளிலும் மற்றும் சந்தைதொகுதிகளிலும் பணமும் பொருட்களும் கொள்ளை போவதாக சார்ஜா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையிலே குறித்த கொள்ளை குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரேவகையான உத்தியை பயன்படுத்தி கொள்ளை மேற்கொள்வதை கண்டுபிடித்த பொலிஸார், குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு அறிவித்ததை அடுத்து விசேட பாதுகாப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்கள் நடத்திய துரித விசாரணை மூலம் கொள்ளை குழுவினர் மாட்டிக்கொண்டுள்ளனர்.

முதலில் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர், அவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கொள்ளையிடப்பட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பின்பு சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடைகளில் அதிகளவில் தொகை பணத்தை விட்டு செல்வது தொடர்பில் கடை உரிமையாளர்களை அவதானமாக இருக்குமாறு சார்ஜா பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக