ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

தமிழ் சிங்கள மொழிகளில் இணையத்தள டொமேன்!


தமிழ் மற்றும் சிங்கள் மொழி மூலம் இணையத்தள டொமேன் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆங்கில மொழியை பயன்படுத்தாமல் தமிழ் மற்றும் சிங்கள விசைப்பலகையை பயன்படுத்தி இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமென எல்.கே டொமேன் பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் குறிப்பிடுகிறார்.
அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் இந்த திட்டத்தின் தம்மை இலவசமாக பதிவு செய்துகொள்ள முடியுமென அவர் கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ள இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக இதுவரை காலமும் ஆங்கிலமொழியில் அதற்கான பெயரை தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது.
புதிய நடைமுறைக்கு அமைய இணையத்தளத்தில் முகவரியை தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழயில் தட்டச்சு செய்வதன் மூலம் அதற்குள் பிரவேசிக்க முடியுமென அவர் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக