புதன், 14 செப்டம்பர், 2011

பூமியை போன்ற புதிய கிரகம் New Earth like planet found!!!



ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண் வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர்.
இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன் (நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது.

அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது.

மேகக் கூட்டங்களும் காணப்படுகிறது. ஆகவே இங்கு உயிர் வாழ முடியும் என கருதப்பட்டாலும் கூட தீவிர ஆய்வுக்கு பிறகே இறுதியான முடிவுக்கு வரமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக