புதன், 14 செப்டம்பர், 2011

காணமல் போன பொலிஸாரினால் குழந்தைகள் தாயாரிடம் ஒப்படைப்பு

மிரிஹாண பொலிஸாரினால் குழந்தைகள் தாயாரிடம் ஒப்படைப்பு (படம்)
காணமல் போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யபட்ட குழந்தைகள் மிரிஹாண பொலிஸாரால் இன்று தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனது இரு குழந்தைகள் காணவில்லை என கடந்த 5ம் திகதி மிரிஹாண பொலிஸ் நிலையத்தில் தாயார் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது குறித்த குழந்தைகளை அவர்களது தந்தையார் அழைத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தந்தையார் இன்று குழந்தைகளுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார். இதனையடுத்து தந்தையார் கைது செய்யப்பட்டதுடன் குழந்தைகள் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக