புதன், 28 செப்டம்பர், 2011

போட்டோஷொப் சர்ச்சையில் கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசன்

rathikaஇலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகி சாதனை படைத்தவர். ஆண்களின் ஆதிக்கம் மிக்க அரசியல் கலாசாரத்தில் 29 வயதான ராதிகாவின் வெற்றி சிலாகித்து பேசப்பட்டது. ஆனால், இப்போது அவரின் புகைப்படமொன்று போட்டோஷொப் முறையில் மாற்றியமைக்கப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இணையத்தில் ராதிகா சிற்சபேசனின் புகைப்படமொன்றை தேடிய ஒருவர் ராதிகாவின் புகைப்படங்களில் ஒன்றை கண்டார். ஆனால் ராதிகாவின் உத்தியோகபூர்வ நாடாளுமன்ற விபரப்பக்கத்தில் அதே படம் மாற்றங்களுடன் காணப்பட்டது. முந்தைய படத்தில் காணப்பட்ட மார்பகப்பகுதி உத்தியோபூர்வ விபரப்பக்கத்தில் போட்டோஷொப் முறை மூலம் மாற்றப்பட்டிருந்தது. முதலாவது புகைப்படம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேலைத்தளத்திற்குப் பொருத்தமானதல்ல என கனடாவின் பழைமைவாத அரசியல்வாதிகள் கருதியதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படி புகைப்படத்தில் மாற்றம் செய்தமை பெண்ணியலுக்கு எதிரானது எனவும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் அவரை குறைந்த பெண்தன்மையாக காட்டுகிறது எனவும் விமர்சகர்கள் சிலர் கூறியுள்ளனர். புகைப்படத்தில் மாற்றம் செய்யவேண்டுமென கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சி கோரியதா அல்லது ராதிகாவின் அலுவலகத்தினரோ, கனேடிய நாடாளுமன்ற இணையத்தள நிர்வாகிகளோ இதை செய்வதற்கு தீர்மானித்தார்களா என்பது தெரியவில்லை. - தமிழ்மிரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக